கோத்தபாய வேட்பாளராக முன் நிற்பாரா ? மகிந்த
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோள்களை கருத்தில் எடுத் துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாவத ற்கு கோத்தபாய ராஜபக்ச எவ்வளவு ஆதரவு தேவை என்பது எனக்கு தெரி யுமெனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் கோத்தாபாய ராஜபக்ச குறித்து காணப்படும் கருத்தை கணக்கிலெடுத்துள்ளதாகவும், தனக்கும் தனது சகோதரரிற்கும் இடையில் எந்தவித கருத்து முரண்பாடுகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எங்கள் இருவர் மத்தியில் அதிகாரப் போட்டியெதுவும் இல்லை எனவும் குறிப் பிட்டுள்ள அவர் முன்னர் குடும்ப ஆட்சி குறித்த குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர்களே தற்போது இக் கருத்தை பரப்புவதாக மகிந்த ராஜபக்ச தெரி வித்துள்ளார்.
பொது எதிரணியில் வெறுமனே ராஜபக்சாக்கள் மாத்திரம் இல்லை அரசாங் கத்தில் இல்லாத சிறந்த அரசியல்வாதிகள் எம்முடன் உள்ளதாகத் தெரிவித் துள்ளாா்.