Breaking News

16 பேர் கொண்ட குழுவுக்கு இடமில்லை - காஞ்சன விஜேசேகர.!

அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணிக்கு கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இடமளிக்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளாா். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேலும் தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் தலைமையை ஏற்றுக் கொள்ப வர்கள் கூட்டு எதிரணியின் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடி யாது என கடந்த வாரம் கூட்டு எதிர்க் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலமையை ஏற்றுக் கொள் ளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியினால் கூட்டு எதிர்க்கட்சி யின் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

இரு பக்கமும் கால்களை வைத்துக்கொண்டிருக்கும் அத்தரப்பினால் கூட்டு எதிர்க்கட்சியின் குழுக் கூட்டத்தில் எவ்வாறு கலந்துகொள்ள முடியும்? எனி னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி, கூட்டு எதிர்கட்சியின் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையை மாத்திரம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு ஏற்றுக்கொள்பவர்களே கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியுமெனத் தெரிவித்துள்ளாா்.