மண் கவ்வுவாரா மாவை?-சுமந்திரன் கேள்வி - THAMILKINGDOM மண் கவ்வுவாரா மாவை?-சுமந்திரன் கேள்வி - THAMILKINGDOM

  • Latest News

    மண் கவ்வுவாரா மாவை?-சுமந்திரன் கேள்வி

    மண் கவ்வுவாரா மாவை? என்ற தலைப்பில் சுமந்திரனின் இரண்டாவது சஞ்சிகையான விடியல் என்ற சஞ்சிகை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழரசு கட்சியால் அண்மையில் புதிய பத்திரிகையாக புதிய சுதந்திரன் சுமந்திரனால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது சஞ்சிகையும் சுமந்திரன் அணியால்  வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பத்திரிகையில் குறிப்பாக மாவை சேனாதிராசாவை கொச்சைப்படுத்துவதாக ''மண்கவ்வுவாரா மாவை'' என்ற தலைப்பில் வெளியான செய்தி பிரதான விடயமாக பேசப்படுகிறது. குறிப்பாக வடமாகாண சபை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை தமிழரசு கட்சியால் அறிவிக்கப்படுவார் என இருந்த நிலையில் முதலமைச்சர் விக்கியே வரவிருப்பதாக சம்பந்தர் காய்களை நகர்த்திவருவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில் மாவையை சீண்டும் முகமாக சுமந்திரன் இவ்வாறு செயற்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.


    இந்த சஞ்சிகைகூட சுமந்திரனின் சாரதியாக செயற்படும் சசி என்பவரே பிரதம ஆசிரியராக சுமந்திரனால் நியமிக்கப்பட்டுள்ளார்  எனவும் கடந்த காலத்தில் ஊடக ஆணுசரணை போதாமையாலேயே தேர்தல் நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து புதிய பத்திரிகைகளை தமிழரசுக்கட்சி சுமந்திரனணியால் வெளியடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    “விடியல்”சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கரவெட்டியில் இடம்பெற்றது. மாலுசந்திக்கு அருகாமையில் உள்ள கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் சஞ்சிகை வெளியீடு நடந்தது.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சஞ்சிகையை வெளியிட்டு வைத்தார். மாகாணசபை உறுப்பினர்கள் எஸ்.சுகிர்தன், கே.சயந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: மண் கவ்வுவாரா மாவை?-சுமந்திரன் கேள்வி Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top