Breaking News

ஐம்­ப­துக்கு ஐம்­பதா? அல்­லது அறு­ப­துக்கு நாற்­பதா? - பாராளுமன்றமே தீா்மானிக்கும்.!

புதிய கலப்பு முறையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஐம்பதுக்கு ஐம்பது வீதம் நடத்துவதா? அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்து வதா? என்­ப­தனை பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண்டுமென தேர்­தல் கள் ஆணை க்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெனி­யாய தேசிய பாட­சா­லையில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளாா். 

 மேலும் உரை­யாற்­று­கையில், 

நாட்டில் தேர்­தல்கள் தாம­த­மா­கின்­றன. உரிய நேரத்தில் தேர்தல் நடத்­தா­விடின் நாட்­டிலும் அரச நிறு­வ­னங்­க­ளிலும் பல குழப்­பங்கள் ஏற்­பட வாய்ப்புள்­ளது. ஆகவே தேர்தல் உடன் நடத்த வேண்டும். 

இல்­லையேல் ஜன­நா­ய­கத்­திற்கு அது பெரும் அச்­சு­றுத்­த­லாக அமையும். இத னால் ஜன­நா­ய­கமும் அபி­வி­ருத்­தியும் அதள பாதா­ளத்­திற்கு தள்­ளப்­பட்டு விடும். சாதா­ரண சங்கம் என்­றாலும் இடைக்­கி­டையே தேர்தல் நடத்­தப்­பட்டு புதி­ய­வர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர். 

அதே­போன்றே மாகாண சபை­க­ளுக்கு உரிய நேரத்தில் புதி­ய­வர்கள் தெரிவு செய்­யப்­பட வேண்டும். மாகாண சபைக்கு புதிய தேர்தல் முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

இதன்­படி தற்­போ­தைக்கு ஐம்­பது வீதம் விகி­தா­சார முறை­மையில் இருந்தும் ஐம்­பது வீதம் தொகுதி வாரி முறை­மையில் இருந்தும் தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்­பதே புதிய முறை­மையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. 

எனினும் அதனை விட 60 வீதம் தொகுதி வாரி­யா­கவும் 40 வீதம் விகி­தா­சார அடிப்­ப­டையில் தெரிவு செய்ய வேண்டும் என பலர் கோரு­கின்­றனர். இந்­நி­லையில் தற்­போது எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் உள்ள நிலையில் அதனை பாரா­ளு­மன்றம் நிறை­வேற்றி தந்தால் மாத்­தி­ரமே எனக்கு தேர் தலை நடத்த முடியும். 

ஐம்­ப­துக்கு ஐம்­பதா அல்­லது அறு­ப­துக்கு நாற்­பதா என்ற தீர்­மா­னத்தை பாரா­ளு­மன்­றமே எடுக்க வேண்டும். அது­மாத்­தி­ர­மின்றி தொகு­தி­களின் எண்­ணிக்­கையை குறைப்­ப­த­னாலும் அத­னையும் பாரா­ளு­மன்­றமே தீர்­மா­னிக்க வேண் டும். 

இதற்கு அப்பால் பழைய முறை­மையின் கீழ் தேர்­தலை நடத்­து­வ­தாக இருந் தால் அத­னையும் பாரா­ளு­மன்­றமே தீர்மானிக்க வேண்டுமெனத் தெரிவித்துள் ளாா்.