Breaking News

கேரளா கஞ்சாவுடன் சாரதி கைது.!

வவுனியா புதிய பஸ் நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இலங்கை போக்கு வரத்து சபையின் சாரதி நேற்றைய தினம் கைதாகியுள்ளாா். 

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பய ணிக்கும் இ.போ.ச பஸ்ஸில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன் பாக குறித்த பஸ்ஸினை பொலிஸார் சோத னையிட்டுள்ளனர்.

இதன் போது 1 கிலோ750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு பையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் இ.போ.ச (வாழைச்சேனை) சாரதியை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். 

இதன் போது குறித்த பை தனது இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார். எனினும் குறித்த பையினுள் பென்ரைவ் (PENDRIVE) காணப்பட்டுள்ளது. அதனை கணனியில் பரிசோதித்த சமயத்தில் குறித்த பென்ரைவ் (PENDRIVE) இல் அவரது குடும்பத்தினரின் புகைப்படம் காணப்பட்டுள்ளது. 

 மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரி வித்துள்ளனா்.