Breaking News

சம்பந்தன் மற்றும் விக்கி பதவிக்காக அலைகின்றனர்-பீரிஸ் குற்றச்சாட்டு

எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும், அவர்
தலைமையிலானதமிழ் தேசி யக் கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவர்கள் பிரதிநித்துவம் செய்யும்மக்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதை விடுத்து, பதவிகளைதக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டு ள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலானஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதுடன், தமிழ் மக்களின்பிரச்சினைக்காக குரல் கொடுக்காத எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன், ரணில் - மைத்திரிதலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்துக் கொள்வதற்கானகடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலானஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்றுபகல் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரான பேராசிரியர்ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மையில் ஊடகங்களுக்கு முன்பாக கருத்துவெளியிட்டிருந்த சகவாழ்வு மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன், எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும், அவ்வாறுமுன்வரும்பட்சத்தில் தனது அமைச்சையே அவருக்கு வழங்கவும் தயாராக இருப்பதாக கூறியிருந்தார். எனினும் எதிர்கட்சித் தலைவராக தனது கடமைகளை செய்யத்தவறிவரும் இரா.சம்பந்தன் தற்போதும் ஓர் அமைச்சராகவே செயற்பட்டு வருவதாகபேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விமர்சித்தார்.

‘எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்அமைச்சுப் பதவியொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நல்லிணக்க அமைச்சர்மனோ கணேசன் அண்மையில் விடுத்திருந்தார். இரா. சம்பந்தன் இன்று எதிர்கட்சித் தலைவராக தனதுபணியை செய்யவில்லை. அரசின் பிரபல அமைச்சர் ஒருவராகவே பணிசெய்கின்றார். கிழக்கு மாகாணமுன்னாள் முதலமைச்சர் அஹமட் மிகவும் ஆவேசமாக கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.

கிழக்கு மக்களுக்கு மாகாண சபை இல்லை. தேர்தலில் வாக்களிப்பதற்கும் சந்தர்ப்பம்இல்லை. கிழக்கு மாகாண சபைக்காக தேர்தலை நடத்த அரசாங்கத்திற்கு இயலாவிட்டால் அந்தஅதிகாரத்தை பெற்று தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்திருக்கின்றார். அதற்கு சட்டத்தில் எந்த இடமும் இல்லை என்ற போதிலும் இன்று எழுகின்ற கேள்வி இதுதான். சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி என்ன? இன்று என்னஏற்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு எந்தவொரு குரலையும் அவர்கள்எழுப்புவதில்லை. கிழக்கு மாகாண சபைக்கு ஏற்பட்ட நிலைதான் இன்னும் இரண்டுமாதங்களில் வடமாகாண சபைக்கு ஏற்படும். வடக்கு மக்களுக்கு மாகாண சபை தேர்தல் இல்லை. அதுசம்பந்தனின் பிரச்சினை இல்லை. எனவே சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இருக்கின்ற ஒரேயொரு தேவைதான் நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்துக்கொள்ள பிரயாசைப்படுவதாகும்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிக்காமலும், வடக்கு மக்களுக்கு வாக்குரிமையை பயன்படுத்த சந்தர்ப்பம் வழங்காமலும் தனது பதவியை மட்டுமே தக்கவைப்பதற்கு எதிர்பார்க்கின்றார் என்றும் குற்றம் சாட்டினார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஒருபுதுமையான விடயமொன்றை கூறியுள்ளார்.

வடமாகாண சபைக்கான தேர்தலை தாமதப்படுத்துவதை தாம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் சபை கலைத்த பின்னரும் அதன் முதலமைச்சராக தாமே இருக்கப்போவதாகவும் கூறியிருக்கின்றார். அதாவது தேர்தல் இல்லை. மக்களின் வாக்குரிமையை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை. ஆனால் மாகாண சபைகளின் ஆயுட்காலமாக 5 வருடங்கள் முடிந்த பின்பு எல்லையற்ற காலத்திற்கு விக்னேஸ்வரன் முதலமைச்சராகவே இருக்கவேண்டுமாம். இது சட்டவிரோதமான செயற்பாடாகும். முதலமைச்சர் என்பவர் மாகாண சபையில் முக்கிய பதவி வகிப்பவர். மாகாண சபைக்கு புறம்பாக சுயாதீனமாக முதலமைச்சர் பதவியை வகிப்பதற்கு அவருக்கு உரிமையில்லை. இன்று நாட்டில் இருக்கின்ற நிலைமை என்ன? 9 மாகாண சபைகளில் 3 சபைகளின்பதவிக்காலம் 10 மாதங்களுக்கு முன்னரே முடிந்துவிட்டது. வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு போன்ற மாகாண சபைகள் 10 மாதங்களாகசெயற்பாடற்றதாகி விட்டன.

எதிர்வரும் செப்டம்பர் மாதமாகும்போது மத்திய, வடமேல் மற்றும் வடமாகாண சபைகளின் ஆயுட்காலமும் முடிவடைகின்றது. இவைக்கான தேர்தலை நடத்தாமல் தொடர்ந்தும் இந்த நிலையை ஏற்படுத்தி வைப்பதே அரசின் நோக்கமாகும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் காலம் நெருங்குகையில் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு 2 வருடங்களாகிவிடும்.அப்படியென்றால் எதற்காக இந்த மாகாண சபைகள் என்ற கேள்வி எழும்