Breaking News

பாடசாலை உடையை நெருப்பில் எரித்தேன்: கொலையாளி வாக்குமூலம்!

“சுழிபுரம் சிறுமியை கொன்றவர்களின் ஒருவர்
மனநோயாளியை போல நடிக்கின்றார், சிறுமியை கொன்றேன் என்பதை ஒப்புக்கொள்கிறார் ஆனால் சரியான காரணத்தை கூறாமல் நடிக்கிறார்“ என வட்டுக்கோட்டை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை ஆறுபேர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நேற்று மாலை சிறுமியின் சடலம் கிணற்றிற்குள்ளிருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து தீவிர விசாரணை நடத்திய பொலிசார், நேற்றிரவே சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரை கைது செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இன்று காலை மேலும் இருவரை கைது செய்தனர்.

பொலிசார் தெரிவித்தபோது – “சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிரதான சந்தேகநபர், கொலையை புரிந்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். தான் மட்டுமே இந்த கொலையை புரிந்ததாக கூறுகிறார்.

சம்பவ இடத்திற்கு அவரை அழைத்து சென்றும் விசாரணை நடத்தினோம்.

அதிக போதையில் இருந்ததாக நிலைதடுமாறி சிறுமியை கொலை செய்து விட்டேன். தோடுகளை திருடவே சிறுமியை கொலை செய்தேன் என கூறுகிறார். சிறுமியை கொலை செய்த பின்னர், அவரது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்து விட்டதாக வாக்குமூலமளித்துள்ளார்.

பின்னர் விரோதம் காரணமாக கொலை செய்தேன் என வாக்குமூலமளித்தார். மனநோயாளி போல தன்னை காட்டி, நடிக்கிறார். முன்னுக்கு பின்னாக வாக்குமூலமளித்தால் தப்பிக்கலாமென பார்க்கிறார்.

ஆனால், நாங்கள் உண்மையை வரவழைப்போம். விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்.“ என்றனர் பொலீசார்.