Breaking News

நடப்பது எங்கள் ஆட்சி ; சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால்.!

தற்போது நடந்துகொண்டிருப்பது எங்களது ஆட்சியென தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் பேசியிருப்பது அரசியல் அரங்கில் சலசலப்பினை உண் டாக்கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களில் பெரும்பான்மை பெற்ற கட்சியே ஆட்சியமைக்க உரிமை கொண்டதாக ஆகிறது.

அவ்வாறு ஆட்சியமைக்க கூடிய கட் சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒரு வரே சட்டபேரவைக்கு தலைவராக (சபாநாயகர்) தேர்ந்தெடுக்கப்படுகி றார். அவ்வாறு பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அவர் எக் கட்சியை சார்ந்தவராக இருப்பி னும் நடுநிலையாக நின்று செயலாற்றிட வேண்டுமென்பது தான் அடிப்படை நியதி. ஆனால், அவரெல்லாம் எதார்த்தத்தில் எவரும் செயற்படுவதில்லை என்பது நிதர்சனம்.

மேற்கண்ட கூற்றினை நேற்றைய பேரவை கூட்டத்தின் போது உறுதிப்படுத்தி யுள்ளார் தற்போதைய பேரவை தலைவர் தனபால். 110 விதியின் கீழ் அறிவிக் கப்பட்ட திட்டங்களுக்காக முதல்வருக்கு நன்றி சொல்லி பேசுவது சரியா என எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வியெழுப்பிய போது,

அப்போதைய உங்களது ஆட்சியின் போதும் சரி, தற்போதும் நடைபெறும் எங் களது ஆட்சியின் போதும் சரி (சில நிமிடங்களில் சுதாரித்து தற்போதைய ஆட்சி என்றார்) இவ்வாறு நன்றி தெரிவிப்பது வழக்கமாகவே உள்ளது என சபாநாயகர் பதிலளித்தார்.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கைகள் ஏதும் எடுக்காமல், தின கரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளாா்.