20ஆவது திருத்தச் சட்டத்தை இன்னும் பார்க்கவில்லை என்கிறாா் - ஜனாதிபதி
மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் நான் தலையிட்டதன் காரணமாகவே இன்று எனக்கு இந்த பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பில் நான் நடவடிக்கை எடுத்தமையே இன்று எனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளாா்.
ஜனாதிபதி செயலகத்தில் அண்மை யில் சில ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி இதனை குறி ப்பிட்டார்.
அவர் அதன்போது மேலும் குறிப்பிடுகையில்,
எனக்கு இன்று ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளு க்கும் காரணம் நான் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் கை வைத்ததே ஆகும்.
அதனால் தான் இன்று அனைத்து குழப்பங்களும் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம் வினாவியபோது அதனை தான் இன்னும் காணவில்லையென்றும் அது தொடர்பில் தான் சில விடயங்களை கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் வரைபை நான் இன்னும் பார்க்கவேயில்லை. எனவே அது தொடர்பில் எதுவும் கூற முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இவ்வாறிருக்க சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ஊழலற்ற புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக கூறினார். அதனை நான் தற்போது உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளாா்.