Breaking News

சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்து ; ஆளுநர் தலைமையில் சந்திப்பு.!

சமூக விரேத செயல்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் வடமாகாண ஆளுநர் தலைமையில் அனைத்துத் தரப்பினரை யும் உள்ளடக்கிய கலந்துரையாடல் எதிர்வரும் 09 ஆம்திகதி திங்கட்கிழமை யாழில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளாா். 

வடக்கில்தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சமூக விரோத செயல்கள் இடம்பெற்ற வண்ணமுள்ளது. அண்மையில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்து நெரித்துக் கொலையான சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது. இப் பிண்ணனியில் ஈடு பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும். 

இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாதிருப்பதற்கும் மக்களுக்க விழிப்பணர்வு களை ஏற்படுத்தும் நோக்குடன் அரச அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் பொலி ஸார் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை ஆளுநர் தலைமையில் இடம் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இக்கலந்துரையாடலில் பொலிஸார் மற்றும் முப்படை பிரதானிகள் மற்றும் சமூக சேவை திணைக்களங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபையின் தவிசாளர் போன்றவர்களை உள்ளடக்கிய சந்திப்பு இடம்பெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண ஆளுநர் றொஜினோல்ட்குரேயுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இதற்கான நடவடிக்கைகளை அவர் மேற் கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.