Breaking News

மரணத்திலும் பிரியாத சகோதரர்கள்.!

வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்று காணாமல் போன ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு மீனவர்கள் 5 நாட்களின் பின் புதன் கிழமை (மதி யம் யாழ் புங்குடுத்தீவு கடற்கரையில் சடலங்களாக காணப்பட்டுள்ளனா். 

கடந்த வெள்ளிக் கிழமை 08 ஆம் திகதி தலைமன்னார் மேற்கு கிராம த்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தோ.கிறிஸ்ரின் கூஞ்ஞ (வயது-32) மற்றும் தோ.எமல்ரன் கூஞ்ஞ (வயது 37) ஆகிய இரு சகோதரர்களும் சம்ப வம் அன்று காலை கடலில் போடப்பட்ட நண்டு வலையை கரை சேர்ப்பதற் காக படகு ஒன்றில் சென்றுள்ளனர். 

எதிர்பாரத விதமாக கடலில் மூழ்கி யாழ் புங்குடுத்தீவு கடற்கரையில் சடல மாக கரை ஒதுங்கினர். பின்னர் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் மரணம் அடைந்த இரு சகோதரர்களின் சொந்த இடமான தலை மன்னார் பகு திக்கு நேற்று கொண்டு வரப்பட்டு உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

அதன் பின்னர் தலை மன்னார் ஆல யத்தில் இறுதி திருப்பலி ஒப்பு கொடு க்கப்பட்டு தலைமன்னார் பொது மயா னத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன. மரணத்தில் கூட இணைபிரியாமல் இறந்த இரு சகோதர்களுடைய நல்ல டக்கத்தில் ஒட்டு மொத்த தலை மன் னார் சமூகமே ஒன்று திரண்டு கண் ணீர் சிந்தி வழி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.