விடுதலைப்புலிகள் அமைப்பு குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பல்ல .!
விடுதலைப்புலிகள் இயக்கத்தை குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பென கருதுவதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லையென சுவிற்சர்லா ந்தின் சம ஸ்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்த குற் றச்சாட்டுகளை எதிர்கொண்ட 13 பேரிற்கு சிறைத்தண்டனை வழங்குவ தற்கு சுவிட்சர்லாந்தின் சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் மறுத்துள் ளது.
குறிப்பிட்ட 13 பேரும் குற்றங்களில் ஈடுபட்ட அமைப்பொன்றிற்கு ஆதரவு வழங்கியதுடன் அதன் நடவடிக்கைகளில் பங்கெடுத்தார்கள் என்ற குற்றச் சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள நீதிமன்றம் அவர் களை விடுதலை செய்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் டபில்யூ டீடீசி அமைப்பிற்கும் இடையில் தொடர்புள்ளதற்கான ஆதாரங்கள் எவையும் வலுவான முறையில் முன்வைக் கப்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பென கருதுவதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லையென நீதிபதி தெரிவித்துள் ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிற்கு 18 மாதம் முதல் ஆறுமாதம் வரையிலான சிறைத்தண்டனையை வழங்கவேண்டும் என சுவிட்சர்லாந்து அரச தரப்பு சட் டத்தரணிகள் விடுத்தவேண்டுகோளை நீதிபதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
மேலும் குற்றம் சுமத்தப்பட்ட 13 பேரில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக மாத்திரம் தெரிவித்துள்ள நீதிபதி கள் அவர்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனைகளை வழங்கி யுள்ளது.
இந்த விசாரணைகளிற்கான செலவை அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.








