Breaking News

கிழக்கு பல்கலைக்கழக மருத்தவபீடம் திறப்பு.!

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட த்தில் இனிமேல் பகிடிவதை தொடரா தென மருத்துவ பீட மாணவர்களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங் கப்பட்ட வாக்குறுதியையடுத்து எதிர் வரும் 13ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட வுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி வைத்தியர் திரு மதி.ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளாா்.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பகிடிவதை காரணமாக கடந்த மே மாதம் 25 ஆம் திகதி முதல் கிழக்கு பல் கலைக்கழக மருத்துவ பீடம் கலவரையற்று மூடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் மருத்துவ பீட மாணவர்களுக்கு , மருத்துவ பீட பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாட லின் பின் பகிடிவதை இனி மேலும் தொடராது என்று மருத்துவ பீட மாணவர் களால் பீடாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கப்பட்ட வாக்குறுதியைப் பரி சீலனை செய்த கிழக்குப் பல்கலைக்கழக மூதவை பீடம் கல்வி நடவடிக்கை களுக்காக மீண்டும் ஆரம்பிக்க ஆவன செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி இறுதி ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் தொடர்ந்து ஏனைய வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என கிழக்கு பல்கலைக் கழக மூதவை பீடாதிபதி வைத்தியர் திருமதி ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்துள்ளாா்.