Breaking News

மனித எலும்புக்கூடு அகழ்வு பணியில் முழுமையான மனித எலும்புக்கூடுகள் மீட்பு.!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அக ழ்வு பணி இன்று 13ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள மனித எலும் புக்கூடுகள் அகழ்வு பணியை மேற் கொள்வதற்காக யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலைய வைத்திய அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டுக்கொண்டுள்ளனா். 

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று குறித்த அக ழ்வு பணிகள் 13ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. மன்னார் நகர நுழை வாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் நேற்று 12 ஆவது நாளாக இடம் பெற்ற நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த பகுதி யில் சூழ்ந்து கொண்டமையினால் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்றைய அகழ்வு பணிகளை பார்வையிட்டு சென்ற நிலையில் மாலை 5.30 மணியளவில் நுற்றுக் கணக்கான மக்கள் அகழ்வு பணிகள் இடம்பெறும் இடத்தை சூழ்ந்து கொண்டதோடு, முழுமையாக மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடு மற்றும் மண்டையோடுகளை பார்க்க முயற்சித்துள்ளனா். 

அதனைத்தொடர்ந்து பொலிஸார் கூடி நின்ற மக் களை அங்கிருந்து வெளியேற்றி நிலைமையை கட் டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13 ஆவது நாளா கவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.