Breaking News

ராஜிவ் கொலை: சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலை நிராகரிப்பு.!



இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார். 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக் கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவி த்துக் கொண்டிருக்கின்றனா். 

இந்நிலையில், கருணை அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை குடி யரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய உள்துறை அமைச்சின் கோரிக்கையின் பேரிலேயே குடியரசுத் தலை வர் மனுவை நிராகரித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் குறித்த 7 குற்ற வாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு கடந்த 4 மாதங் களில் இரண்டு தடவைகள் மத்திய உள்துறை அமைச்சிற்கு கடிதம் எழுதியுள் ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.