சிறைச்சாலையில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சில நிபந்தனைகள்.!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கலகொட ஞனாசார தேரருக்கு ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையை விதித்து ஹோமாகம நீதிமன்றம் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட் டுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக் னெலி கொடவின் மனைவி சந்யா எக் னெலிகொடவை, ஹோமாகம நீதி வான் நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தி யமை தொடர்பில் பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோ மாகம நீதிவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி தெரிவித்துள்ளது.
இந் நிலையில் ஹோமாகமக நீதிவான் உதேஷ் ரணதுங்க அவருக்கு எதிரான தண்டனையை நேற்று அறிவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தார். இதன் படியே இவருக்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய கைதி களுக்கான சட்ட விதிமுறைகளே, கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ள ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச் சாலையில் நேற்று மாலை சிறைவைக்கப்பட்டார்.
இந் நிலையில், ஏனைய கைதிகளுக்கான ஆடையையே அவருக்கும் அணிய நேரிடும் என்றும், விசேட பாதுகாப்பு அவசியமாயின் அதனை வழங்கலாமெனவும் சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.








