Breaking News

அதிகார சபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் கையளிப்பு.!

மலை­யக அபி­வி­ருத்­தியை மையமாக வைத்து புதி­தாக அதி­கார சபை­யொ ன்றை உரு­வாக்கும் நோக்கில் தயா­ரிக்­கப்­பட்ட பெருந்­தோட்ட புதிய கிரா­மங் கள் அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்­ட­மூலம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வாய்­மூல விடைக்­கான வினா, பொது மனு சமர்ப்­பித்தல் போன்ற நிகழ்ச்சி நிரல்கள் முடி­வ­டைந்த பின்னர் அமைச்சர் பி.திகாம்­பரம் குறித்த சட்­ட­மூ­லத்தை சமர்ப்­பித் துள்ளாா்.

தேசிய அபி­வி­ருத்திச் செயல்முறையில் பெருந்­ தோட்ட சமு­தா­யத்­த­வர்­களின் பங்­க­ளிப்­பினை பெற்­றுக்­ கொள்­வ­தற்­கா­கவும் பெருந்­தோட்ட பிராந்­தி­யத்தில் சமூக, பொரு­ளா­தார, கலா­சார மற்றும் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­தி­களின் மூலமாக பெருந்­தோட்ட சமு­தா­யத்­தி­னரை சமூக நீரோட்­டத்­தினுள் சேர்ப்­ப­தனை உறு­திப்ப­டுத்தும் நோக்­குடன் மலை­யக அபி­வி­ருத்­திக்­கான புதிய அதி­கார சபை உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. 

மலை­யக அபி­வி­ருத்­தியை மைய­மாக கொண்ட வெளி­நாட்டு மானிய கொடை ­களை பெற்­றுக்­கொள்­வ­துடன் வெளி­நாட்டு மானிய கொடை, நன்­கொ­டை­களை பெறும்போது வெளி­நாட்டு மூல­வ­ளத்தின் அங்­கீ­கா­ரத்தை பெற வேண்டு மெனச் சட்­டத்தில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. 

அத்­துடன் அதி­கார சபை­யினால் தீர்­மா­னிக்க கூடி­ய­வ­ராக ஏதேனும் அரச வங்­கியில் அல்­லது அரச நிதி நிறு­வ­னத்தில் நடப்பு, சேமிப்பு அல்­லது வைப்பு கணக்­கு­களைத் திறந்து பேண முடியும். 

மேலும் அதி­கார சபையின் நோக்­கங்­க­ளுக்­காக உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டாத எவை­யேனும் நிதி­களை அரச வங்­கி­க­ளிலும் அரச நிதி நிறு­வ­னங்­க­ளிலும் முத­லீடுகளைச் செய்­யலாம். 

அதி­கார சபை­யினால் கொள்­வ­னவு செய்­யப்­பட்ட ஏதேனும் அசை­வுள்ள அல்­லது அசை­வற்ற ஆத­னத்தை குத்­த­கைக்கு கொடுக்­கலாம், ஈடுவைக்­கலாம், அடை­மானம் வைக்­கலாம், விற்­கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதி­கார சபை­யா­னது அர­சாங்­கத்தின் திட்­டங்­க­ளையும் நிகழ்ச்சி திட்­டங்­க­ளையும் கருத்­திட்­டங்­க­ளையும் அமு­லாக்­குதல், தோட்­டங்­க­ளி­லுள்ள வீடு­க ளின் சட்­டப்­ப­டி­யான இருப்­பாட்­சி­யா­ளர்­க­ளுக்கு அத்­த­கைய வீடு­களின் சொத்­தாண்­மையை வழங்­கு­வ­தற்­காக அவர்­க­ளுக்கு உரித்­து­று­திகள் வழங்­கு­வதை வச­திப்­ப­டுத்தல், தோட்ட இளை­ஞர்­களின் கல்வி அபி­வி­ருத்­திக்­காக மூன்றாம் நிலை மற்றும் உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் பிர­வே­சிப்­ப­தற்கு உதவி வழங்­கு தல், 

தேசிய கட்­டட ஆராய்ச்சி மற்றும் அனர்த்த பேர­ழிவு செய­லாட்சி நிலை­யத்தின் கலந்­தா­லோ­ச­னை­யுடன் அபா­ய­க­ர­மான இடங்­களை அடை­யாளம் காணுதல், அவற்றை மாற்று பாவ­னைக்­காக மாற்­றுதல் போன்ற பணி­களை கொண்­டி­ருக்கும். 

அத்­துடன் அதி­கார சபையின் உறுப்­பி­ன­ராக விருப்­ப­தற்­கான தகை­மை­யீனம், நிய­மிக்­கப்­பட்ட உறுப்­பி­னர்கள் தொடர்­பான ஏற்­பா­டுகள், அதி­கார சபையின் இலச்­சினை, சபையின் கூட்­டங்­க­ளுக்கு வருகை தரு­வ­தற்­கான ஊதியம், பணிப்­பாளர், தலை­மை­ய­தி­பதி அதிகாரங்களும் பணிகளும், அதிகார சபைக் கான புதிய நிதியம் உருவாக்கல், அதிகார சபையின் செயற்பாடுகளில் அமைச் சரின் வகிபாகம் போன்ற பல்வேறு விடயங்கள் சட்டமூலத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளது.