"புதிய அரசியலமைப்பை தாமதித்தால் நல்லிணக்கத்தில் பாதிப்பு - சந்திரிகா"
அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளை அரசாங்கம் மந்தகதியிலேயே செயற்படுகின்றது.
இதனால் பாதிக்கப்படுவது தேசிய நல்லிணக்க முயற்சிகளேயாகும், அந்த முயற்சிகள் ஊக்கம் பெறவும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பதற்கும் விரைவாக செயற்பட்டு அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டும் என்று தேசிய ஐக்கிய மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைப்பின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க வலியுறுத்தியுள்ளாா்
தேசிய சமாதான பேரவையின் சர்வமத குழுவின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.
போருக்கு பின்னரான காலப்பகுதி யில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை துரிதப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகள் குறித்து ஆராய்வதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். சர்வ மதங்களையும் சேர்ந்த மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்தி ஜீவிகள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர், தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, ஆகியோரும் கலந்துகொண்டனர். நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான பிரேரணைகள் அடங்கிய ஆவணம் சர்வமத குழுவினரால் இவ்வேளையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேலும் குறிப்பிடுகையில், இலங்கையின் பெரும்பான்மை இனமாக பௌத்த மக்கள் காணப்படுகின்றனர். பிர தான மதமாகவும் பௌத்த மதம் காணப்படுகின்றது. ஆகவே பௌத்த மக்கள் பிற மதங்களை மதித்தால் தேசிய நல்லிணக்கம் சுயமாகவே தோற்றம் பெறும். கடந்த காலங்களில் இனங்களுக்கிடையில் பாரிய கசப்பான சம்பவங்கள் காணப்பட்டன.
30வருட காலமாக நாட்டில் இடம் பெற்ற பயங்கரவாத யுத்தத்தின் தாக்கங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றன.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாலும் அது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடையவில்லை.
அதாவது தமிழ் மக்கள் தங்களது தாய் மொழியில் அரச திணைக்களங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பும் போது அதற்கான பதில்கள் சிங்கள மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. இது அம்மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாகவே காணப்படுகின்றது.
அரச திணைக்களங்களில் மும்மொழி தேர்ச்சி பெற்றவர்களின் பதவிகளுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றமை மற்றும் மொழித் தேர்ச்சி இன்மை போன்ற விடயங் கள் இவ்விடயத்தில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன.
தேசிய மொழி நல்லிணக்கம் காணப்படாமையே பயங்கரவாத யுத்தம் தோற் றம் பெறுவதற்கு பிரதான காரணமாகும்.
தமிழ் மக்கள் ஒரு கட்டத்தில் தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சமாதான முறையிலே அரசாங்கத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால் அரசாங்கத்தில் இருந்து எவ்வித சாதகமான தீர்வுகளும் கிடைக்காததால் அவர்கள் ஆயுதமேந்தி போராடினர் இதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.இதன் தாக்கம் 30 வருட காலமாக தொடர்ந்தது. இன்றும் தொடர்கின்றது.
அரசாங்கத்தில் ஒரு பிரிவினர் அரசியல் தீர்வு கோரி நிற்கின்றனர். சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் அரசியல் தர்க்கங்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய ஆட்சியாளர்கள் செயற்படாமல் தேசிய நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டு அரசியலில் செல்வாக்கு செலுத்த வேண்டும்.
இன்று சர்வதேசங்களில் சாதிப்பவர்கள் இலங்கைத் தமிழர்களாகவே காணப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் எமது நாட்டுக்கு திரும்பி வரப்போவது கிடை யாது. இதுவே எமது நாட்டுக்கு பாரிய இழப்பாகும். இருப்பவர்களையா வது தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு வரைபு செயன்முறை களை அரசாங்கம் மந்தகதியிலே முன்னெடுத்துள்ளது.
அதனால் பாதிக்கப்படுவது தேசிய நல்லிணக்க முயற்சிகளேயாகும், அந்த முயற்சிகள் ஊக்கம் பெறவும் தேசிய இனப்பிரச்சினைகளுக்கு அரசியல் தீர் வொன்றை காண்பதற்கும் விரைவாக செயற்பட்டு அரசாங்கம் புதிய அரசியல மைப்பினை உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.








