Breaking News

கிழக்கில் அபி­வி­ருத்­தி­ புரட்சிகளை முன்னெடுப்பதாக - பிரதமா் ரணில்.!

கிழக்கு மாகா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை­ அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக விசேட அபி­வி­ருத்தித் திட்­டங்­களுக்கான முயற்சிகளை எடுத்­துள்ளோம். கிரா­மிய மட்­டத்­தில் அபி­வி­ருத்தி புரட்­சி­களை 2019 – 2020 ஆம் ஆண்­டு­களில் முன்னெடுக்க வுள்ளதாகவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்துள்ளாா்.

மட்­டக்­க­ளப்பு, ஆரை­யம்­பதி பிர­தேச செய­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஆரம்­பித்து வைத்தபோது உரை­யாற்­று­கையி­லேயே பிர­தமர் மேற்­கண்ட­வாறு தெரிவித் துள்ளாா். 

 பிர­தமர் மேலும் உரை­யாற்­று­கையில்,


கிழக்கு மாகாணம் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மாகாணம் என்ற வகையில் ஒரு வித்­தி­யா­ச­மான மற்றும் புதிய பொரு­ளாதார அபி­வி­ருத்தி செயற்­பாட்டு திட்­டத்­தினை அமுல்படுத்­த­வி­ருக்­கின்றோம். கடந்த இரண்டு தினங்கள் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நின்று இவைகள் தொடர்­பாக ஆராய்ந்­துள்ளோம்.

இப் பிர­தே­சத்தில் சுற்­று­லாத்­து­றை­யினை பாரிய வளர்ச்­சி­ய­டையச் செய்­ய­வேண்­டி­யுள்­ளது. அதனை மேற்கொள்­வ­தற்கு போக்­கு­வ­ரத்து பிரச்­சினை உள்­ளது. அதற்­காக விமானப் போக்கு வரத்­துக்­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்கு முடி­வெ­டுத்­துள்ளோம். 

விமானப் போக்­கு­வ­ரத்­துக்­களை துரி­தப்­ப­டுத்­தினால் சுற்­று­லாத்­துறை வளர்ச்­சி­ய­டை­வ­துடன் இப்­பி­ர­தே­சங்­களின் வாழ்­வா­தா­ரமும் அதி­க­ரிக்கும். ஜூன் மாதத்­தி­லி­ருந்து அக்­டோபர் வரை­யான காலப்­ப­கு­தியில் மாத்­தி­ரம் தான் கிழ க்கு மாகா­ணத்தில் சுற்­று­லாத்­துறை செயற்­பாடு இருக்கும் என்­பதை மாற்றி முழு வரு­டமும் சுற்­றுலாச் செயற்­பா­டு­களுக்கான செயற்பட வேண்டியுள் ளது.  

மத்­தள விமான நிலை­யத்­தினை ஆரம்­பிப்­பதும் இதற்கு ஒரு வச­தி­யாக அமை யும். மற்­றைய திட்­டங்­க­ளிலும் எமது கவ­னத்­தினை செலுத்தி அதனை நாங் கள் அமுல் படுத்திக்கொண்டு போகின்றோம். எல்லாவற்­றையும் செய்­வ­தற்கு பாரிய அளவில் நிதி தேவைப்­ப­டு­கின்­றது. 

நாங்கள் இந் நாட்­டை­பொ­றுப்­பெ­டுக்கும் போது நிதி இருக்­கவே இல்லை. நாட் டின் வரு­மானம் போதாது. அத­னு­டைய வட்­டியை கொடுப்­ப­தற்கு நிதி­யி­ருக்க வில்லை. எடுத்த பணம் வட்­டியை கொடுப்­ப­தற்கு கூட போதாமல் இருந்­தது. 

இன்னும் கொஞ்சக் காலம் போகு­மாக இருந்தால் கிறீஸ் நாட்டைப் போன்று வங்­கு­ரோத்­தில்தான் நாடு செல்லும். அதனை விடவும் மிகவும் கஷ்­ட­மாக இருக்கும். தற்­போது கட­னையும் கொடுத்து வட்­டி­யையும் செலுத்தி நாட்டின் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்பி வரு­கின்றோம். 

இந்த இரண்­டையும் செய்­வ­தற்கு நாட்டின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்க வேண்­டிய தேவை எங்­க­ளுக்கு ஏற்­பட்­டது. அதற்­கா­கத்தான் வரியை அதி­க­ரிக்க வேண்­டிய தேவை எங்­க­ளுக்கு ஏற்­பட்­டது. இதனால் மக்­க­ளுக்கு சுமை கூடி­யுள்­ளது. சுமை கூடி­ய­வுடன் அர­சாங்­கத்­திற்கு ஏசு­கின்­றனர். 

அர­சாங்கம் என்ன செய்­வது? நாங்கள் கடனை கொடுத்து விட்டு மெது மெது­வாக பய­ணிக்­கலாம். கூடு­த­லான கடன் பணம் 2019 ஆம் ஆண்டில் கொடுக்க வேண்­டி­யுள்­ளது. அத­னையும் எப்­ப­டி­யா­வது கொடுத்து விட நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். நாங்கள் உங்­க­ளிடம் திட்டு வாங்­கி­னாலும் பணத்­தினை தேடி எடுத்துக் கொண்டு அபி­வி­ருத்தி செய்வோம். 

அதில் கிழக்கு மாகா­ணத்­திலும் பல அபி­வி­ருத்­தி­க­ளை மேற்­கொள்வோம். நாங் கள் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­தி­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்கள் இல­கு­வாக தமது கட­மை­களை மேற்கொள்­வ­தற்­காக பிர­தேச செய­ல­கங்கள், மாவட்டச் செய­ல­கங்­க­ளுக்­கான வசதி வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்தி வழங்கியுள்ளோம். 

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்­டு­களில் ஒவ்­வொரு கிராம உத்­தி­யோ­கத்தர் பிரி­வு­க­ளிலும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக 15 இலட்சம் ரூபா வீதம் நிதி­யினை வழங்­கி­யி­ருந்தோம். கிரா­மிய மட்­டத்­திலே விசித்­தி­ர­மான அபி­வி­ருத்தி புரட்­சி­களை 2019–2020ஆம் ஆண்­டு­களில் செய்­ய­வுள்ளோம். 

இந்த அபி­வி­ருத்தி திட்­டங்­களை கிரா­மங்­க­ளி­லேயே மேற்­கொள்வோம். இந்த அபி­வி­ருத்தி திட்­டங்­களில் எல்­லோரும் பங்குகொண்டு வேலை­களை செய்ய வேண்டும். இந்த அடிப்­ப­டையில் கிராம சக்தி வேலைத்­திட்டம், அதே போன்று கம்­பெ­ர­லிய எனும் கிராம புரட்சி அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளையும் ஆரம்­பித்­துள்ளோம். 

இதற்கு புறம்­பாக பல புதிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளையும் கிரா­மங்­க­ளுக்கு எடுத்துச் செல்­ல­வுள்ளோம். அத­னூ­டாக இந்­தப்­பி­ர­தே­சங்­களில் பாரிய வீதி அபி­வி­ருத்­திகள், நீர்ப்­பா­சன அபி­வி­ருத்தி வேலை­களை மேற்கொள்ள நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். அத்­தோடு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வேலைத்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்­துள்ளோம். 

இந்த வேலைத்­திட்­டங்கள் எல்லாம் கிராம சக்தி கிராம புரட்சி என்­பனவற்­றுக்கு புறம்­பாக செயற்­ப­டுத்­தப்­படும் வேலைத்­திட்­டங்­க­ளாகும். கம்­பெ­ர­லிய கிராம புரட்சி எனும் வேலைத்­திட்­டத்­தினை ஒரு பாரிய வேலைத்­திட்­ட­மாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ளோம். 

கிரா­மத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள குறு­கிய கால வேலைத்­திட்­டங்­க­ளுக்­கா­கத்தான் நாங்கள் நிதி­யொ­துக்­கீ­டு­களை செய்­துள்ளோம். இந்த அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளு­டைய கேந்­திர நிலை­யங்கள் பிர­தேச செய­ல­கங்­க­ளாகும். ஒரு சதத்­தி­னையும் திரும்ப திறை­சே­ரிக்கு அனுப்­பாமல் முழு­வ­தையும் செலவு செய்து கொள்­ளுங்கள். 

கிரா­மத்­திற்கு அந்த நிதியை கொடுக்க வேண்டும். சகல திட்­டங்­க­ளையும் கிராம மட்­டத்தின் மட்­டத்­தி­லி­ருந்து கொண்டு செல்ல வேண்டும். அப்­போது கிரா­மத்தில் பணப்­பு­ழக்கம் ஏற்­படும். அப்­ப­டி­யான வேலைத்­திட்­டங்­க­ளைத் தான் நாங்கள் இப்போது செய்து கொண்டு செல்­கின்றோம் என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடை பெற்ற இந்த வைபவத்தில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல். ஏ.எம். ஹிஸ் புல்லாஹ், 

பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, இராஜாங்க அமைச்சர் அலி சாஹீர் மௌலானா மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மண்முனைப் பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய தேசி யக் கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான எஸ். கணேசமூர்த்தி உட்பட பலா் கலந்து சிறப்பித்துள்ளனா்.