மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பது அனைவரதும் பொறுப்பு - ஜனாதிபதி - THAMILKINGDOM மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பது அனைவரதும் பொறுப்பு - ஜனாதிபதி - THAMILKINGDOM

 • Latest News

  மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பது அனைவரதும் பொறுப்பு - ஜனாதிபதி

  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள வறுமையை ஒழிப்பதற்கான அபிவி ருத்தி திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி திட்டங்களை முறையாக நடைமுறைப் படுத்துவதோடு மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பதற்காக உழைப்பது அனைவரினதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்துள்ளார். 

  இரத்தினபுரி மாகாணசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கிராம சக்தி மக்கள் இயக்கத்தின் சப்ரகமுவ மாகாண செயற்பாட்டுக் குழு கூட்டத் தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரி வித்துள்ளார். 


   அச் செயற்குழு கூட்டத்தில் இரத்தினபுரி மாகாண அரசியல் முக்கியஸ்தர்கள், அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர். அதில் கிராம சக்தி மக்கள் இயக்கம், சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விதம், அதன் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக கவனம் செலுத் தப்பட்டுள்ளது. 

  மேலும் பிரதேச மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி அவற்றை தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய உட னடி நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

  கேகாலை நகரத்தில் வர்த்தக நிலையங்களுடன் கூடிய இரவு பகல் வர்த்தக பூங்கா ஒன்றை நிர்மாணிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

  அதற்காக செலவாகும் 65 மில்லியன் ரூபா தொகையில் முதற் கட்டமாக 25 மில்லியன் ரூபா நிதியை அடுத்த வாரம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்ப தாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். 

  இரத்தினபுரி மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக முன்வைக்கப் பட்டுள்ள முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை பெற்றுத்தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  கித்துல் உற்பத்திகளுக்கு உரிய சந்தை தொடர்பில் வாய்ப்பு இல்லாமையி னால் மாகாண தொழிற்துறையாளர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத் துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு அப்பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார். 

  இதற்காக குடாவ சிங்கராஜ சுற்றுலா சேவை மற்றும் கித்துல் உற்பத்தி கிராம சக்தி மக்கள் சங்கம் மற்றும் காகில்ஸ் நிறுவனம் ஆகியனவற்றுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது. 

  மேலும் மாவட்டத்தில் பழ விவசாயிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் பழங்களை பாதுகாத்து வைப்பதற்கான நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் மற்றும் அவ் உற்பத்திகளை தனி யார்துறை பங்களிப்புடன் உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான முறை தொடர்பிலும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

  கிராமசக்தி மக்கள் சங்கத்திற்கு வழங்கப்படும் முதலாவது தவணைக் கொடுப் பனவு இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட செயலாளர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கு 510 இலட்சம் ரூபாவும் கேகாலை மாவட்டத் திற்கு 330 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மக்களை வறுமையிலிருந்து விடுவிப்பது அனைவரதும் பொறுப்பு - ஜனாதிபதி Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top