Breaking News

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சம்பந்தன் எதிா்ப்பு என குற்றச்சாட்டு - தினேஷ்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எனக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளாா். 

 மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட் சிக்கு அடுத்த படியாக கூடுதலான அங்கத்தவர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியை உத்தியோக பூர்வ எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் எதிர்க்கட்சித் தலைமைப் பதவியும் எமக்கு வழங்கப்பட வேண்டும். தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைத்தவாறு உள்ளோம். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங் கப்பட்டுள்ளது. அது ஜனநாயக விரோத செயல் என்பதுடன் மேலும் அவ்வெதி ர்க்கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி போலவே உள்ளது. 

கடந்த வாரமும் சபாநாயகரைச் சந்தித்து கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை யில் சபாநாயகர் அவகாசம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.