இங்கிலாந்து அதிரடி இந்திய அணி வீரா்களுக்கிடையே நட்பு.! - THAMILKINGDOM இங்கிலாந்து அதிரடி இந்திய அணி வீரா்களுக்கிடையே நட்பு.! - THAMILKINGDOM

 • Latest News

  இங்கிலாந்து அதிரடி இந்திய அணி வீரா்களுக்கிடையே நட்பு.!

  இந்தியாவுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரின் போது ஐ.பி.எல். போட்டியில் இந்திய அணி வீரர்களுடன் ஏற்பட்ட நட்பு எல்லாம் ஆடுகளத்தில் வெற்றி வேட்கையுடன் களமிறங்கும் போது மறந்து போகும் என இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட நாயகன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். 

  இங்­கி­லாந்து - இந்­திய அணிகள் மோதும் 5 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

  தொடர்ந்தும் இது தொடர்பில் கூறிய பட்லர், ஐ.பி.எல். தொடரின் போது இங்கிலாந்து, இந்திய அணி வீரர்களுக் கிடையே நட்பு ஏற்பட்டிருக்காம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக நாம் ஆடு களம் புகும்போது அந்த நட்பினை பார்க்க முடியாது. சில இந்திய வீரர்களுடன் ஆடியுள்ளேன். 

  ஆனால் களத்தில் அவை மறக்கப்படும். அனைவரும் போட்டி மனப்பான்மை யுடன் தான் ஆடுவார்கள். பழகிய முகங்கள் இருக்கலாம், கிரிக்கெட்டை விட வும் கூடுதலாக சிலருடன் பழகியிருக்கலாம், இது நடப்பு கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய விடயமே. 

  ஆனால் களத்தில் நட்பினை பார்க்க முடியாது. பயிற்சி நாட்கள், உணவு மேசை என நட்பு இருக்கலாம். மொஹின் அலி, விராட் மற்றும் சாஹலுடன் ஆடியுள் ளார். அவர்கள் நன்றாகப் பழகியது எனக்குத் தெரியும். ஹர்திக் பாண்டியாவு டன் நான் ஆடியிருக்கிறேன். 

  ஆனால் களத்தில் சில நேரம் டெஸ்ட் போட்டியின் தன்மையால் அவையெல் லாம் மறக்கப்படுமெனத் தெரிவித்துள்ளாா். 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இங்கிலாந்து அதிரடி இந்திய அணி வீரா்களுக்கிடையே நட்பு.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top