Breaking News

இலங்கைக்கு போர்க்கப்பலை வழங்குவதாக அமெரிக்கா உத்தேசம்.!

அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட- உயர் திறன்வாய்ந்த போர்க்கப்பலான- ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, இலங்கை கடற் படைக்கு அடுத்தமாதம் அன்பளிப்பாக சமா்ப்பிக்கப்படவுள்ளது.

1967 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப் போர்க் கப்பல், 50 ஆண்டுகள் சேவையாற்றிய நிலையில், கடந்த மார்ச் மாதம், அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டது. 378 அடி ( 115 மீற்றர்) நீளம் கொண்ட இப் போர்க்கப்பல் தற் போது. 

ஹவாய் தீவிலுள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் தரித்து நிற்பதுடன் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன் பாட்டுக்கு அமைய இப் போர்க்கப்பல் கொடையாக வழங்கப்படுகின்ற போதி லும், இதனைப் பழுது பார்க்கும், உதிரிப்பாக செலவுகளுக்கான கொடுப்பனவு களைச் செலுத்த வேண்டும். 

ஹவாயில் தரித்திருக்கும், ‘யு.எஸ்.சி.ஜி ஷேர்மன்’, போர்க்கப்பலின் உலங்கு வானூர்தி இறங்கு தளத்தில் வரும் ஓகஸ்ட் 22 ஆம் திகதி நடக்க ஏற்பாடு செய் யப்பட்டுள்ள நிகழ்வில், இப் போர்க்கப்பலை அதிகார பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. எனினும், 2019 பெப்ரவரி வரையில் இக் கப்பல் ஹவாயிலேயே தரித்து நிற்குமென எதிர்பார்க்கப்படுகிறது.