Breaking News

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றப்போவதில்லை - மஹிந்த அமரவீர

வடக்கிலுள்ள  இராணுவ முகாம்களை ஒரு போதும் அகற்றப்போவதில்லை எனவும்  இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரி க்கைகளுக்கு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர முழங்கியுள்ளாா். 

மேலும் தெரிவிக்கையில்.....,


அம்பாந்தோட்டை துறைமுகம் எப்படி பல குறைப்பாடுகளை கொண்டு காணப்பட் டதோ அதேபோன்று தான் இன்று மத்தள விமான நிலையமும் முழுமையடையாத விமான நிலையமாக காணப்படுகின்றது. பல பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையம் இன்று எவ் வித பயனுமற்ற நிலையில் உள்ளது. 

சிறிய காலக்கட்டத்திற்குள் விமான நிலையத்தை முழுமையப்படுத்துவதே எமது நோக்கம். மேலும் தற்போது வடக்கில் காணப்படுகின்ற இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மாற்று நடவடிக்கை எடுக்கப்படுமே தவிர எக் காரணம் கொண்டும் வடக்கில் இரா ணுவ முகாம்களை அகற்ற முடியாதெனத் தெரிவித்துள்ளாா்.