சிறுமி ஹாசினி கொலைக்குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு - உயர்நீதிமன்றம் தீா்ப்பு.!
சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை போரூரை அடுத்த மதனந்த புரத்தை சேர்ந்த பாபுவின் 6 வயது மகள், 2017 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையா டிக் கொண்டிருந்த போது திடீரென்று காணாமல் போனார்.
இது குறித்து மாங்காடு லீசில் அவரது பெற்றோர் புகாரின் ஊடாக பொலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் குடியிருக்கும் தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் கொடுமை செய்து, கொலை செய்ததும், பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தஷ்வந்தை பொலீசார் கைது செய்தனர். இக் கொலை வழக்கு, செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனையை விதித்து, கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளாா்.
இத் தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குளறு படிகள் உள்ளதால், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, தன்னை விடுவிக்க வேண்டுமென தஷ்வந்த் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின், மேல் முறையீடு குறித்த விசாரணை இன்று நடைபெற்றது. இவ் விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தஷ்வந்தின் மேல்முறையீட்டை நிராகரித்து, தூக் குத்தண்டனையை உறுதிசெய்துள்ளனர்.
முன்னதாக, நேற்றைய தினம் டெல்லி நிர்பயா கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளது.








