Breaking News

சு.க.வுடனான உறவை இழக்க நேரிட ஏற்படலாம்.!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவாடும் சுதந்திரக் கட்சியுடன் பயணிக்க முடி யாதுள்ளது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனான உறவையும் முறிக்க வேண்டிய நிலையில்  அவர்கள் செயற்படுவதாக பொது எதிரணி உறுப்பினராக அடை யாளப்படுத்தும் சுயாதீன அணியின் உறுப்பினர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித் துள்ளாா். 

மஹிந்த யாரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக்­கு­கின்­றாரோ அவ­ருடன் இணைந்து ஆட்­சியை வீழ்த்தும் முயற்­சி­ப்போம் என்பதுடன் பொது எதி­ர­ணியின் செயற்­பா­டுகள் மற்றும் எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் முயற்­சிகள் குறித்து வின­விய போதே இவ்வாறு தெரிவித்துள் ளாா்.

 மேலும் தெரிவிக்கையில்....,



ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம் இணைந்து தனி அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக முயற்­சி­ற்சித்தோம் எனினும் கடந்த மூன்று ஆண்­டு­களில் 16 பேரை மாத்­தி­ரமே எம்­முடன் இணைக்க முடிந்­துள்­ளது.

இப்­போ­துள்ள நிலையில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் இடையில் விரிசல் நிலை­மையே ஏற்­பட்டு வரு­கின்­றது. அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் இனி­மேலும் எம்­மு டன் இணை­வார்கள் என்ற நம்­பிக்கை எமக்கு இல்லை.

அவர்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்­ளனர். ஆகவே அவர்­க­ளுக்கு இனியும் நிலை­மை­களை எடுத்­து­ரைக்க முடி­யாது என்­பதே எமது நிலைப்­பாடு. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அர­சாங்­கத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்கும் வரையில் எம்மால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக பய­ணிக்க முடி­யாது.

நாம் 70 பேர் கொண்ட பல­மான சக்­தி­யாக உள்ளோம். இந்த அர­சாங்கம் கலை யும் வரையில் நாம் எதிர்க்­கட்­சி­யாக செயற்­பட எண்ணியுள்ளோம். அதற்­கான சகல நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுத்துக்கொண்டிருக்கின்றோம்.

சபா­நா­ய­கரைச் சந்­தித்து எமது நியா­யங்­களை எடுத்­து­ரைத்து எழுத்து மூல கோரிக்­கை­யையும் முன்­வைத்­துள்ளோம். அடுத்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது எமது கோரிக்­கைக்­கான பதிலை சபா­நா­யகர் முன்­வைப்பார். எவ்­வாறு இருப்­பினும் எமது 70 பேர் கொண்ட அணியே எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும்.

எம்மில் யார் எதிர்க்­கட்சி தலைவர் என்­ப­தையும் மஹிந்த ராஜ­பக் ஷ தீர்­மா­னிப்பார். அவர் யாரை எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிக்­கின்­றாரோ அவ­ரையே நாமும் ஏற்­றுக்­கொள்வோம்.

நாம் அனை­வரும் பொது­வான நோக்­கத்தில் அர­சியல் அணி­யாக ஒன்­றி­ணை ந்­துள்ள நிலையில் எமக்குள் அதி­கார போட்டி இல்லை. அனை­வரும் இணை ந்து அடுத்து அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்­டுமே உள்­ளது.

மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ தலை­மையில் பல­மான அர­சாங்­கத்தை அமைக்க வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியை வீழ்த்த வேண்டும். அதற்­காக எம்­முடன் இணைந்து செயற்­பட விரும்பும் அனை­வ­ருக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.

அதே போல் எமது அணி­யினர் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் ஒட்­டிக்­கொண்டு அர­சியல் செய்ய நினைத்தால் அதன் பின்னர் அவர்­க­ளுக்கும் அர­சியல் வாழ்க்கை இல்லாது போய்விடும். மக்கள் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் செயற்பட வேண்டும். மஹிந்த ராஜ பக்ஷவுடன் மட்டுமே எமது பயணம் அமையுமெனத் தெரிவித்துள்ளாா்.