யுத்தம் ஏற்படாது நாட்டை உருவாக்கும் காலமாகும் - விக்னேஸ்வரனுக்கு மங்கள.!
நினைவுத் தூபிகளை அகற்றுவதற்கோ நிர்மாணிப்பதற்கோ உரிய காலம் இது அல்ல,
மீண்டும் யுத்தம் ஏற்படாத நாட்டை உருவாக்கும் காலமாகும் என்பதை விக்னேஸ்வரனின் அவதானத்திற்கு கொண்டு வருவதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளாா்.
வடக்கில் நினைவுத் தூபிகளை நிர்மாணிப்பதாகவும் அகற்றுவதாகவும் கூறு வதற்கு விக்னேஸ்வரனுக்கு உரிமை உள்ளது.
இதனால் நாடு பிளவுபடுமென கூற முடியாது. இவ்வாறான கருத்துகள் நாட்டை பிரிப்பவையல்ல.
நினைவுத் தூபிகளை நிர்மாணிக்க அதிகாரம் உள்ளது.
நாம் வெளிநாட்டவர்க ளுடன் யுத்தம் செய்யவில்லை. வெளிநாட்டு இராணுவத்தை தோற்கடித்த யுத் தத்தை செய்யவில்லை. எமது நாட்டின் சகோதரர்களுடனே யுத்தம் செய் தோம் தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ளது.
தற்போது தூபிகளை நிர்மாணிக்கும் காலம் அல்ல. நாட்டை கட்டியெழுப்பும் காலமாகும் என்பதனை விக்னேஸ்வரனுக்கு கூற விரும்புகின்றேன்.
தற் போது நினைவு தூபி நிர்மாணிப்பதோ அல்லது அகற்றுவதோ பிரச்சினை யில்லை.
மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டை உருவாக்குவதே தேவையாகும் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் கள் எழுப்பிய “நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் தரு வாயில் வடக்கில் நினைவு தூபிகளை அகற்ற வேண்டுமென சி.வி விக்னேஸ்வரன் கோரியுள்ளாரே?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு விவரித்துள்ளாா்.








