Breaking News

புலித்தேவன் மற்றும் நடேசனை கொலை செய்தது யார் ?

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து தகவல்களை பெற்றுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்றில் பிர சுரமாகியுள்ளது. 

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வெளி யிட்ட தகவலின் அடிப்படையில் வெள் ளைக்கொடிகளை ஏந்தி வந்த விடு தலைப்புலிகளின் சமாதான அலுவலர் புலித்தேவன் மற்றும் அவர்களின் காவல்துறை அதிபர் நடேசன் ஆகி யோரை கொலை செய்ய கோத்தபாய ராஜபக்ச உத்தர விட்டாரா? 

என்ற விடயத்தை அமரிக்க அதிகாரிகள் வினவியுள்ளனர். மேலும் காணாமல் போனோர் தொடர்பில் கோட்டா பயவுக்கு உள்ள தொடர்புகள் தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந் துள்ளதாக குறித்த சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. 

இதேவேளை கோத்தபாய ராஜபக்ச 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை அமரிக்கா விரும்பவில்லை என்று பதவியில் இருந்து விடைப்பெற்றுச் சென்ற அமெரிக்க தூதுவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித் ததாக தகவல் பரபரப்பாகியுள்ளது.