நல்லாட்சியை கவிழ்ப்பதாக மஹிந்த கனவில் பேசுகின்றாா் - அகிலவிராஜ்
சக இன மக்களும் நல்லாட்சியின் பக்கமாக இருப்பதுடன் போராட்டங்களின் ஊடாக தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமென மஹிந்த ராஜபக்ஷ கனவு காணக் கூடாதென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரிக்கையில்,
போராட்டங்களின் ஊடாக ஜனநாயக முறையில் உருவாக்கிய தேசிய அர சாங்கத்தினை ஒரு போதும் வீழ்த்த முடியாது. 2015 ஆம் ஆண்டு இன மத வேறு பாடுகளைத் தாண்டி நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இன்று வரை தேசிய அரசாங்கம் ஜன நாயக முறையிலே உள்ளது.
கடந்த அரசாங்கத்தினை போன்று சர்வாதிகார ஆட்சியினை செயற்படுத்த வில்லை.
அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் உதயன் கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரது சகாக்கள் மாத்திரமே கல ந்து சிறப்பித்துள்ளனா்.
இவர்கள் யார் எத்தன்மை கொண்டவர்கள் என்ற விடயத்தை சிறந்த அரசியல் கொள்கை கொண்ட மக்கள் நன்கு அறிவார்கள்.
அத்துடன் அரச வைத்திய சங் கத்தினர் அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட கூடாது புனிதமான வைத் திய சேவைக்கு மாத்திரமே அரசாங்கத்துடன் ஒன்றினைய வேண்டும் அரசி யல் விடயங்களை மையப்படுத்தி பொது மக்களை துன்புறுத்துவது அவர்க ளின் பணிக்கு அவப் பெயரை ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ளாா்.