மிக விரைவில் தெரிவிப்பதாக - சபாநாயகர்
எதிர்க்கட்சி தலைவர் பதவி விடயமாக கட்சித் தலைவர்களுடன் கலந்துரை யாடிய பின் சட்ட ஆலோசனைகளுக்கு அமைவாக இவ் வாரமளவில் இறுதி முடிவினை தெரிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளாா்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து நேற்று பாராளுமன்றில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதிக ஆசனங்களை கொண்ட குழு என்ற அடிப்படை யில் தமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமெனக் கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சபாநாயகர் மேற்கண்ட அறிவிப்பினை விடுத்ததுடன் எந்தவொரு அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை. நான் அழுத்தங்களுக்கு அடிபணிய மாட் டேன் எனத் தெரிவித்துள்ளாா்.