காலமாகி விட்டாா் கலைஞர் கருணாநிதி.!
குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக காவேரி வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று காலமாகி விட்டாா்.
தனது 94 லது வயதில். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கரு ணாநிதிக்கு, ஆகஸ்ட் 6 ஆம் திகதி காலை அவரது உடல்நிலை பாதிக்கப் பட்டுள்ளது.
இன்று மாலை வெளியான அறிக்கையில் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் நிறைந்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியுமென காவேரி வைத்தியசாலை தெரிவித்தது.
இந்த நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளாா்.