வித்தியா படுகொலைக்கான மேன்முறையீட்டு விசாரணை இன்று

மேன்முறையீட்டின் மீதான விசாரணையானது 5 நீதியரசர்களை உள்ளடக்கிய நீதியரசர்கள் குழுவினர் முன்னிலையிலேயே நடைபெறவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு குறித்த மாணவி பாடசாலை செல்லும் போது கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலி யல் வல்லுறவின் பின்பு கொலை செய்யப்பட்டுள்ளாா்.
இக் கொலை தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரம் மீதான வழக்கு விசாரணையானது தமிழ்மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றினால் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட 9 சந்தேக நபர்களில் இருவர் நிரபராதிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனைய 7 பேருக்கும் கடந்த வருடம் ட்ரயல் அட்பார் நீதிமன்றால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தீர்ப்பளிக்கப்பட்ட அந்த 7 குற்றவாளிகளும் தமக்கெதிரான தண்டனையை எதிர்த்து தமது தரப்பு சட்டத்தரணிகளினூடாக மேன்முறையீடு தொடுத்துள்ளனா்.
இவ் வழக்கின் விசாரணையானது இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் அதற்காக தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 7 பேரை யும் உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.