Breaking News

கலைஞரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை !

மறைந்த, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி ஊர் வலம் மாலை நான்கு மணியளவில் ஆரம்பமாவதாக உத்தியோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கலைஞரின் உடலம் மெரீனா கடற் கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அரு காமையில் முழு அரச மரியா தைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட விருப்பதாக உத்தியோகபூர்வ தகவ லில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலம் இன்று மாலை 4.00 மணியளவில் இராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை மெரீனா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்படும். 

இதேவேளை கருணாநிதியின் உடலம் புதைக்கப்படவுள்ள இடத்தில் அதற் கான ஆயத்தங்கள் முழுவீச்சோடு நடைபெற்று வருகின்றன. மண்வாரிகளைக் கொண்டு குழி தோண்டப்பட்டுள்ளதுடன் குழியின் உள்ளே நான்கு பக்கமும் கொங்கரீற் சுவர்கள் எழுப்பப்படவுள்ளது.