5 ஆம் திகதி தேர்தல் நடைபெறலாம் - மனோ.!
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் எந்த முறையின் கீழ் நடைபெறவேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் மத்தியில் நேற்றைய தினம் சந்திப்பு முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள் ளது.
பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அலரி மாளிகை யில் இச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இச் சந்திப்பில் ஜே.வி.பி மற்றும் பொது எதிரணியின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை இச் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் விகிதாச்சார பிரதி நிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் பரவியுள்ளன.
இதேவேளை இச் சந்திப்பின் பின் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோகணேசன் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 10 திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் நடைபெறலாமெனத் தெரிவித்துள்ளாா்.
கட்சி தலைவர்கள் மத்தியில் இடம்பெறவுள்ள அடுத்த சந்திப்பில் இது குறித்த இணக்கப்பாடு எட்டப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத் தினது பிரச்சினையில்லை மாறாக இது தேசிய பிரச்சினை இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளாா்.