Breaking News

அரசாங்கம் பதவி விலகுவதற்கான காலம் நெருங்கி விட்டதாக - மஹிந்த

நான் இந்த அரங்கை அடை­யும்­போது பூ மரத்­தி­லி­ருந்து பூக்கள் விழு­வதை அவ­தா­னித்தேன். எனவே அது நல்ல சகு­னத்தின் சின்னமாகும்.

ஆகவே எமக்கு தற்­போது அர­சி­யலில் நல்ல சகுனம் ஆரம்­பித்­து­விட்­ட­தா­கவே நான் கரு­து­கிறேன். எனவே ஆட்­சியைக் கைப்­பற்றும் வரையில் நாம் ஓயப்­­போ­வ­தில்லையென முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரிவித்துள்ளார். 

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த “ஜன­பலசேனா” மக்கள் எழுச்சிப் பேரணி நேற்று கொழும்பில் நடை­பெற்­ற­துடன் பேர­ணியைத் தொடர்ந்து விகா­ர­ம­கா­தேவி பூங்­கா­வி­லுள்ள உள்­ளக அரங்கில் கூட்­டமும் நடை­பெற்­றது. அக் கலந்துரையாடலில் மேலும் உரை யாற்றுகையில்.....


நாடு தற்­போது மிகவும் பயங்­கர நிலையை அடைந்து வரு­கி­றது. மக்­களால் தமது வாழ்க்­கையை கொண்டு நடத்த முடி­யாது திண­று­கின்­றனர். பொருட்­களின் விலை என்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரித்­துள்­ளது. 

மூன்று நேரம் உணவு உண்டு வாழ்ந்த சமூகம் தற்­போது ஒரு வேளை உண­வுடன் கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ளும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அந்­நி­லைக்கு தாய்­மார்­களும் பழக்­கப்­பட்டு விட்­டனர். இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விடய­மாகும். இந்த நிலையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோரே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். 

என்­று­மில்­லா­த­வாறு வரி­களை அதி­க­ரிக்­கின்­றனர். தேர்தல் காலத்தில் இளம் சமூ­கத்­தினர் மழைக்கு நனை­யாது மோட்டார் கார்­களில் பய­ணிக்கும் கனவை அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால் தற்­போது என்ன நடை­பெற்­றுள்­ளது? மோட்டார் காருக்கு வரி அதி­க­ரித்தமை தொடா்பாக யோசிக்கத் தேவை யில்லை. 

 ஏனெனில் உண்­டி­ய­லுக்கு வரி அற­விடும் அர­சாங்கம் மோட்டார் காருக்கு வரி அற­வி­டு­வதில் ஆச்­ச­ரியம் இல்லை. நல்­லாட்சி அர­சாங்கம் மக்கள் பற்றி கவ னம் செலுத்­தாது தம்மை பற்றி மாத்­திரம் அக்­கறை கொண்­டுள்­ளனர். ஆட்­சி­யா­ளர்கள் தமக்கு ஏற்ற வகையில் அர­சி­ய­ல­மைப்பைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கு முயற்சிக்கின்றனா். 

மேலும் கடந்த காலங்­களில் எம்மை திரு­டர்கள் எனக் குறிப்­பிட்டு வந்­தனர். ஆனால் தற்­போது யார் திரு­டர்கள் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். அர­சாங்கம் எவ்­வி­த­மான அபி­வி­ருத்­தி­க­ளையும் மேற்­கொள்­வ­தாக இல்லை. மாறாக தேசிய வளங்­களை விற்­பனை செய்து கொண்டிருக்கின்றது. 

நாட்­டி­லுள்ள பெரு­ம­ளவு காணி­யையும் விற்­பனை செய்து விட்­டது. ஆகவே எதிர்­கால எமது சந்ததியி­ன­ருக்கு நாட்டில் எதுவும் இல்­லாது போய்­விடும் அபாயம் உள்­ளது. அர­சாங்கம் விற்­பனை செய்யும் வளங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு ஒரு தரப்­பினர் உள்­ளனர். எனவே அந்த சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கு நாம் ஒன்றைக் கூறிக்­கொள்ள விரும்­புகின்றோம். 

அதனைப் பொறுப்­புடன் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன். அதா­வது நல்­லாட்சி அர­சாங்கம் விற்­பனை செய்யும் வளங்­களை கொள்­வ­னவு செய்ய வேண்டாம். ஏனெனில் நாம் ஆட்­சிக்கு வந்­த­துடன் அது தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்­துவோம். அதனை எந்­த­வொரு நாடும் மறந்துவிட கூடாது. 

நாட்­டி­லுள்ள சகல வர்க்­கத்­திற்குச் சொந்­த­மான குறித்த வளங்­களை விற்­பனை செய்யும் எந்­த­வொரு அதி­கா­ரமும் அர­சாங்­கத்­திற்கு இல்லை. அதற்­கான ஆணையை மக்கள் வழங்­க­வு­மில்லை. அவ்­வாறு விற்­பனை மூலம் அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் தரகுப் பணம் பெறு­கின்­றனர். 

அதனால் அர­சாங்­கத்­திற்­குள்­ளேயே பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. ஒரு­வ­ருக்­கொ­ருவர் விரல் நீட்டும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை திருடர் என முதலில் குறிப்­பிட்­ட­வர்கள் நாம் இல்லை. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே முதலில் பிரத­மரை திருடர் எனத் தெரிவித்துள்ளாா். 

நாட்டில் நிர்­வாகம் இல்லை, அரா­ஜக ஆட்­சியே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. மத்­திய வங்கி மோச­டி­யுடன் தொடர்­பு­பட்ட அர்­ஜுன மகேந்­திரன் வெளி­நாட்டில் உள்ளார். அவ­ரைக்­கொண்டு வர­மு­டி­யாத நிலையில் அர­சாங்கம் உள்­ளது. எனினும் அவரின் பிள்­ளை­களின் திரு­ம­ணத்தில் நாட்டு தலை­வர்கள் கலந்­து­கொள்­கின்­றனர். 

மோடி­களை அத்­த­ரப்­பினர் மறந்­துள்­ள­துடன் எம்­மையும் மறக்கச் சொல்­கின்­றனர். அது மாத்­தி­ர­மன்றி எனது பெய­ருக்கு அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்­க­ளுக்கு பெரும் அச்சம் உள்­ளது. காலி மைதா­னத்தில் கட்­டிடம் ஒன்­றிற்கு எனது பெயர் சூட்­டப்­பட்­டுள்­ள­தனால் அம்­மை­தா­னத்தை அகற்­று­வ­தற்கும் எதிர்­பார்க்­கின்­றனர். 

நீதி­மன்­றத்­தைப் பயன்­ப­டுத்தி எம்மை அடக்­கு­வ­தற்கு எதிர்­பார்க்­கின்­றனர். அதற்­கா­கவே விசேட நீதி­மன்றை அமைத்­துள்­ளனர். அதன் மூலம் வழக்­குகள் அமைச்­சர்­களின் காரி­யா­லயங்­களில் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது. அங்கு சட்­டமா அதி­பரை அழைத்தும் தீர்­மா­னிக்­கின்­றனர். சட்­டமா அதி­ப­ருக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கின்­றனர். 

எனவே நீதி­மன்­றங்­களை நிர்­வ­கிக்கும் ஏகா­தி­பத்­திய நிலைக்கு அர­சாங்கம் சென்று கொண்­டி­ருக்­கி­றது. இது­தானா நீதி­மன்ற சுயா­தீனம் எனக் கேட்­டுக்­கொள்­கிறோம். மக்கள் விடு­தலை முன்­னணி உட்­பட அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் இது குறித்து தற்­போது பேசு­வ­தில்லை. 

இன்னும் நாம்­ தான் ஆட்சி நடத்­து­வ­தாக மக்கள் விடு­தலை முன்­னணி நினைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.அத்­த­ரப்பு அர­சாங்­கத்தை விமர்­சிக்­காது எம்­மையே விமர்­சிக்­கின்­றனர். எனினும் தொடர்ந்து மக்­களை ஏமாற்ற முடி­யாது. ஆகவே அர­சாங்கம் ஒவ்­வொரு நாளும் மேற்­கொள்ளும் வேலைத்­திட்­டங்­க­ளினால் நாட்­டையும் மக்­க­ளையும் சீர­ழிக்­கின்­றனர். 

கடந்த காலங்­களில் மக்­களின் கைகளில் பணம் இருந்தது. ஆனால் தற்­போது மக்­களின் கைகளில் பணம் இல்லை. போதைப்­பொருள் வர்த்­த­கர்­களின் கைக­ளி­லேயே பணம் புழங்­கு­கி­றது. போதைப்­பொருள் வர்த்­த­கத்தின் பின்­ன­ணியில் அர­சி­யல்­வா­திகள் உள்­ளனர். 

பாட­சா­லை­க­ளுக்­குள்ளும் போதைப்­பொருள் சென்­றுள்­ளது. நாட்டில் குற்­றச்­செயல் அதி­க­ரித்­துள்­ள­தாக பொலிஸ் மா அதிபர் குறிப்­பி­டு­கிறார். எனினும் நாட்டில் குற்­றச்­செயல் குறை­வ­டைந்­துள்­ள­தாக பிர­தமர் குறிப்­பி­டு­கிறார். இரா­ணு­வத்­திற்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர். 

இது மிகவும் பயங்­க­ர­மா­ன­தாகும்.போதைப்­பொருள் வர்த்தகம் தொடர்பில் விசா­ரணை செய்யும் அதி­காரம் இரா­ணு­வத்­திற்கு வழங்­கு­வதற்கு எதிர்­பார்க்­கின்­றனர். எனவே அதன் பின்னர் நாட்டில் கொலைச் ­சம்­பவம் அதி­க­ரித்­துள்­ளதாகக் குறிப்பிட்டு அது குறித்தும் இரா­ணு­வத்­திடம் பொறுப் புக் கொடுப்பர். பின்னர் குடும்பப் பிரச்­சி­னைகள் அதி­க­ரித்­துள்­ளதாகக் குறிப்­பிட்டு அதனை விசா­ரணை செய்­வ­தற்கும் இரா­ணு­வத்­திடம் வழங்குவர். 

இதுதான் இராணுவ மயமாக்கலின் முதல் கட்ட நடவடிக்கைகளாகும். இச் செயற்பாட்டுக்கு பாராளுமன்றத்திலும் அனுமதி பெற்று சட்டமாக்கிக் கொள் வதற்கு எதிர்பார்க்கின்றனர். எனவே இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும். 

ஆகையினால் தான் நாம் இன்று இப் பேரணியை ஆரம்பித்துள்ளோம். இப் பேரணி இத்துடன் நிறைவடையப் போவதில்லை. நல்லாட்சி அரசாங்கத்தை துரத்தும் வரையில், அரசாங்கம் பதவி விலகும் வரையில் இப்போராட் டத்தைத் கைவிடப் போவதில்லை. 

அரசாங்கம் பதவி விலகுவதற்கான காலம் தற்போது நெருங்கி விட்டது. ஆகவே பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.