Breaking News

அரசாங்கம் மஹிந்த மீது சேறு பூச முயற்சி என்கிறாா் - பந்துல.!

அரசாங்கம் மஹிந்தவை பழிவாங்குவதாக நினைத்து தனக்கு தானே பாதாள குழியினை வெட்டிக்கொள்வதுடன் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடு களும் அரசாங்கத்திற்கே எதிர்விளைவுகளை தீண்டுமென பாராளுமன்ற உறுப் பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளாா். 

மேலும் தெரிவிக்கையில். 


குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று மஹிந்த ராஜபக்ஷவிடம் பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத் துள்ள இவ் விடயத்தின் பின்னணியில் அர சாங்கத்தின் இராஜதந்திரங்கள் காணப்படுவ துடன் எமக்கு எதிராக அரசாங்கம் கடந்த மூன்று வருட காலமாக குற்றச் சாட்டுக்களை சுமத்தியவாறு உள்ளது. . 

முறையற்ற பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ள ஐக்கிய தேசிய கட்சி யின் நிர்வாகத்தின் காரணமாக இன்று பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்விடயங்கள் தொட ர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதை விடுத்து எம்மீது குற்றம் சுமத்து கின்றது. 

இன்று மக்கள் தேசிய அரசாங்கத்தின் ஆட்சியின் பலனை நன்கு அனுபவித்து விட்டார்கள். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்த லின் பெறுபேறுகள் அரசாங்கத்திற்கு பாரிய பதிலடியினை ஏற்படுத்தியது. 

அன்றிலிருந்து அரசாங்கம் தனது வேலைத்திட்டங்களிலும், அமைச்சரவையி லும் பாரிய மாற்றங்களை எற்படுத்தியது. ஏற்படுத்திய மாற்றங்களினால் இது வரை காலமும் எவ்வித மாற்றங்களும் மக்கள் மத்தியில் ஏற்படவில்லை.

கடந்த அரசாங்கத்தினை சட்டத்தின் முன் குற்றவாளிகளாக காட்டி தான் தேசிய அரசாங்கம் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற வேண்டிய அவசியம் ஏதும் இல்லை மிகுதியாக உள்ள காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றினால் மக்கள் தேசிய அரசாங்கத்தை விரும்பினால் தோற்றுவிப்பார்கள் ஆனால் 2015ம் ஆண்டு செய்த தவறை மீண்டும் மக்கள் ஒரு போதும் செய்ய மாட்டார்கள். 

சர்வதேசத்தின் குப்பையாக இன்று இலங்கை மாற்றப்பட்டு வருகின்றது. சிங்கப்பூர் நாட்டுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பாரிய விளைவுகளை ஏற் படுத்தும் என்று தெரிந்தும் அரசாங்கம் அதனை அமுல்படுத்தும் நோக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

கடந்த காலங்களில் இந்த உடன்படிக்கையினை கைவிட வேண்டும் என்று பல் வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தியும் அரசாங்கம் அவற்றை கவனத்திற் கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக நடந்து கொள்கின்றது.

இவ்வாறு முறையற்ற விதத்தில் செயற்படும் அரசாங்கம் இன்று மஹிந்த வின்; மீதும் சேறு பூச முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. நடைபெற வுள்ள மாகாணசபை மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் பொது எதிரணிக்கு வெற்றி என்ற விடயத்தை நன்கு அறிந்தே தற்போது அரசாங்கம் எமக்கு எதி ராக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது. 

எமக்கு எதிராக அரசாங்கம் செயற்படும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்கே எதிர் விளைவாக அமையுமெனத் தெரிவித்துள்ளாா்.