Breaking News

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மோசடி- விசாரணைக்கு அழைப்பு கோத்தா.!

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மிகின் எயர் ஆகியவற்றில் நடைபெற்ற முறைகேடு கள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக் குழு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது. 

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் கேட்டரிங் நிறுவனம் மற்றும் மிகின்லங்காவில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆராயும் ஆணைக்குழுவே கோத்த பாய ராஜபக்சவை விசாரணைக்காக அழைத்துள்ளது. 

ஆகஸ்ட் 29 ம் திகதி வாக்கு மூலம் வழங்குவதற்காக சமூகமளிக்குமாறு ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேபோன்று முன்னாள் அமைச் சர் சஜின்வாஸ் குணவர்த்தன மற்றும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோரையும் ஜனாதிபதி ஆணைக்குழு வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிர்வாகத்தில் ஸ்ரீலங்கா எயர்லைன்சின் முகாமைத்துவத்தில் இந்த நால்வரும் முக்கிய பொறுப்பிலிருந்தமை குறிப் பிடத்தக்கது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் பணிப்பாளர் சபையில் முக்கிய உறுப்பினராக பணியாற்றியுள்ளாா்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து யூன் மாதம் விசாரணைகளை ஆரம்பித்த ஜனாதிபதி ஆணைக்குழு பல முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளது.