Breaking News

விஜயகலாவின் சர்ச்சைக்குரிய கருத்திற்காக சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு.!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின ருமான திருமதி விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து விடய மாக நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியுமென சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவித் துள்ளார். 

சட்டமா அதிபரின் குறித்த முடி வினை சபநாயகர் நாளை வியாழக் கிழமை கூடவுள்ள நாடாளுமன்றத் தில் தெரிவிக்கலாமென எதிர்பார்க் கப்படுகின்றது. திருமதி விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. யாழ்ப்பாணத் தில் விடுதலைப் புலிகள் தொடர்பில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரியா சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். 

இதற்கிணங்கவே இவ் அறிக்கையினை சட்டமா அதிபர் சபாநாயாகருக்கு அனுப்பியுள்ளார். இச் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணையினை நடாத்தியுள்ளனா். 

இவ் விசாரணையின் போது அமைச்சர்களான திலக் மாரப்பன, வஜிர அபேவர்தன, வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உட்பட பலரிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. 

மேலும் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.யிடமும் வாக்கு மூலங்கள் பெறப் பட்டதையடுத்து விசாரணை நிறைவு பெற்று பொலிஸார் தமது அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளித்திருந்தனர். இந்நிலையில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தனது தீர்மானத்தை அறிக்கையின் ஊடாக சபாநாயகரிடம் கையளித்துள்ளார். 

இவ் அறிக்கையின் பிரகாரம் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் யாழ். மாவ ட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக் குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளைகளின்படி நடவடிக்கை எடுக்க முடியுமென சட்டமா அதிபர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு தெரிவித்துள் ளார். 

எனினும் சட்டமா அதிபர் அனுப்பியுள்ள அறிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்பு முரணானதா? இல்லையா? என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை. 

இதனால் குறித்த கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா என தெரிவிக்கு மாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சட்டமா அதிபரிடம் கோரியுள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது. இவ் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அலுவலக அதிகாரி யொருவரிடம் வினாவிய போது மேலும் தெரிவிக்கையில், 

 விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்பு முரணானதா? இல்லையா? என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை. எனவே அரசியலமைப்பின் பிரகாரம் விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து முரணாதா? 

என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் முடிவினை சபாநாயகர் எதிர் பார்த்துள் ளார். இது தொடர்பான அறிவிப்பினை சட்டமா அதிபர் விரைவில் முன் வைக்க கூடுமென எதிர்பார்பார்க்கின்றோம்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் தற்போது வழங்கியுள்ள முடிவினை சபா நாயகர் நாளை வியாழக்கிழமை கூடவுள்ள நாடாளுமன்றத்தில் விவரிக்கப் படலாமென எதிா்பாா்க்கப்படுகின்றது.