Breaking News

அமைச்சுப் பதவி வேண்டாம் இரவு பகலாக வேலை செய்து தருகின்றேன் - பா.டெனிஸ்வரன்

எனது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற ஒரு மாகாணமாக மாற்ற வேண்டுமென பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். 

 மேலும் தெரிவிக்கையில்.....


எமது போக்குவரத்து சேவையினை ஏனைய மாகாணங்கள் திரும்பி பார் க்க வேண்டும், அதனைப் பார்த்து ஏனையவர்கள் பின்பற்ற வேண்டும் என்பது எனது இலட்சியங்களில் ஒன்று. இதற்காக இரவு பகலாக பாடுபட்டு நியதிச்சட்டம் உருவாக்கி அதன் ஊடாக போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கி இருந்தேன். பிழை செய் வோருக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு அச்சட்டத்தில் இடமிருக் கின்றது. 

பல்வேறு strategy work Plan செய்து வைத்திருந்தேன்  அவையனைத்தும் தற் போது முதலமைச்சரின் கைகளில் உள்ளன. அனைத்தும் வெறுமனே கிடப் பில் போடப்பட்டுள்ளது. 

எம்மில் சிலர் தானும் செய்ய மாட்டார்கள் செய்பவர்களையும் விடமாட் டார்கள். இது எமது இனத்தின் சாபக்கேடு. வீதி விபத்தினால் இன்று எமது மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு மூலையில் ஒரு உயிரை இழ ந்து கொண்டு இருக்கின்றோம். 

இதைப் பார்த்துக் கொண்டு இப்படியே இருக்கப் போகிறோமா? சாரதிகளின் கவனக்குறைவு என்று காரணம் கூறப்போகின்றோமா? தங்கள் பிள்ளைகளை யும் உறவுகளையும் இழந்து பரிதவிக்கும் குடும்பங்களின் வேதனையை உங் களால் உணர முடியவில்லையா? 

தயவு செய்து விடயத்துக்கு பொறுப்பாக இருக்கும் முதலமைச்சரும், அதி காரிகளும் அடிமட்டத்துக்கு இறங்கி அர்ப்பணிப்போடு சேவை செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையேல் இன்னும் எத்தனையோ எமது உறவுகளை இழக் கப்போகின்றோம். 

செய்ய முடியா விட்டால் அமைச்சு பொறுப்பை தரவேண்டாம் தயவு செய்து ஒரு அனுமதியைத் தாருங்கள் இரவு பகலாக நின்று வேலை செய்து தருகின் றேன். 2015 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் உயிரிழந்த 5 வயது சுவஸ்திகன் என்ற மாணவனின் மரணம் இன்னும் என் மனதில் ஆறாத வலியாக பதிந் துள்ளது தயவு செய்து சிந்தித்து செயற்படுங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.