பரந்தன் பகுதியில் சாரதி ஒருவரை தாக்கிய சிறப்பு அதிரடிப்படையினர்!
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனச் சாரதி ஒருவரை சிறப்பு அதி ரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் பதற்ற நிலைமை ஏற்பட்டது டன் புவிச்சரிதவியல் அளவை சுரங்கங் களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பின் தொட ர்ந்து சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் பரந்தன் சந்தியில் வழிமறித்து சாரதியை பிடித்து, பரந்தன் பேருந்து நிலை யத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பதற்றமான சூழலும் நிலவியதுடன் சாரதியை துப் பாக்கியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விட யமாகும்.









