Breaking News

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இன்று.!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலை யில், வடக்கு கிழக்கில் இருவேறு போராட்டங்கள் ஆயத்தமாகவுள்ளன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவி னர்கள் யாழ்ப்பாணத்திலும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அம் பாறையிலும் இருவேறு போராட்டங் களில் ஈடுபடவுள்ளனா்.

இம்முறை சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைசார் அமைப் புகள் ஏற்பாடு செய்துள்ள வாகனத் தொட ரணி நேற்று முன்தினம் கொழும்பில் தனது பயணத்தை தொடா்ந்துள்ளது. 

இன்று குறித்த பேரணி யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளதோடு, அங்கு மாபெ ரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்த காலத்திலும் அதற்கு பின்ன ரான காலப்பகுதியிலும் வடக்கு கிழக்கில் மட்டுமன்றி, தென்னிலங்கையிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். 

யுத்தம் நிறைவடைந்து 9 வருடங்கள் கடக்கின்ற நிலையிலும், காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களது உறவினர்கள் தவிக்கின்றாா்கள். 

இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்ட பலரின் நிலை குறி த்து அரசாங்கம் எவ்வித பதிலையும் வழங்கவில்லை. இந்நிலையில், காணா மல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப் படுத்த வேண்டுமென வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 500 நாட்களாக நகா்ந்துள்ளது. 

தமது உறவினர்களுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் வெளிப் படுத்த வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளாக அமைந் துள்ளது. 

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் தினமான இன்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதோடு, இவ்விடத்தை சர்வதேசம் மிகப் பாரதூரமான பிரச்சினையாக கவனத்திற் கொண்டு தீர்வை பெற்றுத்தர வேண்டுமென உறவினர்களை இழந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.