Breaking News

தமிழர்களை கடத்தியதால் கைது செய்யப்படுகிறார் சிறிலங்கா முப்படைகளின் தளபதி ?

சிறிலங்காவின் முப்படைகளின் பிரதானியான முன்னாள்கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்து விசாரணைக்கு உட் படுத்துவதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாருக்கு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் அனுமதி வழங்கியுள்ளாா். 

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து 11 தமிழ் இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் சிறி லங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதி லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சிக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன உதவியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசார் நீதவானிடம் தெரியப்படுத்தியதுடன், அதற்கான ஆதாரங்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனா். 

குறித்த போதுமான ஆதாரங்கள் இருப்பின் அவரை கைது செய்து விசா ரணைக்கு உட்படுத்த நீதவான் அனுமதி வழங்கியிருக்கின்றார். எவ்வாறாயி னும் சிறிலங்கா அரச படைகளின் அதி உயர் தளபதியாக இருக்கும் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கைதுசெய்ய சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன அனுமதிப்பாரா என்ற சந்தேகத்தை அரசியல் ஆய்வா ளர்கள் வெளியிட்டுள்ளனர். 

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தொடர்புபட்டிருக் கும் அவன்காட் பாதுகாப்பு நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் படைத் தள பதிகள் மூவர் 2016 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது சிறிலங்கா அரச தலைவர் அதற்கு எதிராக கடும் ஆத்திரம் வெளியிட்டிருந்ததுடன், முன்னாள் படைத் தளபதிகளை தண்டிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்தும் உள்ளாா்.

இக் கருத்தை சிறிலங்கா அரச தலைவர் அடிக்கடி நாட்டு மக்களுக்கு கூறி வரும் நிலையில், சிறிலங்காவின் முப்படைகளின் தளபதியாக இருக்கும் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கைது செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. 

எவ்வாறாயினும் தமிழ் இளைஞர்கள் 11 பேரை வெள்ளைவானில் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்தின் பிரதானசந்தேக நபரான லெப்டினன் கமாண் டர் சந்தனபிரசாத் ஹெட்டியாராச்சிக்கான விளக்கமறியலையும் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதிவரைகொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்றைய தினம் நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சிறிலங்கா தலைநகர் கொழும்பின் தெஹிவளை மற்றும்கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் 2008 ஆம் மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு தெஹி வளை மற்றும் கொட்டாஞ்சேனைபகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 தமி ழர்களை வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான டி.கே.பி. தஸ நாயக்க உட்பட கடற்படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 

இ வழக்கின் பிரதான சந்தேக நபராக குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்ட கடற்படையின் புலனாய்வு அதிகாரியான லெப்டி னன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி நீண்டகாலமாக தலை மறை வாகியிருந்த நிலையில் கடந்த 13 ஆம் திகதி கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்காஜயரத்ன முன் பாக இந்த வழக்கு ஓகஸ்ட் 29 ஆம் திகதியான நேற்றைய தினம் காலை விசா ரணைக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத்ஹெட்டியாராச்சியை மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் நீதமன்றில் பிரசன்னமாகிய குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொறுப்பதிகாரி நிஷாந்த டி சில்வா, சந்தேக நபர் தொடர்பான விசாரணை அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளாா்.

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, வெளிநாட்டிற்குச்செல்வதற்காக போலியான அடையாள அட்டை மற்றும் கடவுச் சீட்டுக்களை தயாரித்திருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அவரால் தயாரிக்கப்பட்ட அத்தனை ஆவணங்களும் போலியானவை என்பதையும் பொலிஸ் இனஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா மன்றிற்குத் தெரியப்படுத்தியதுடன், லெப்டினன்கமாண்டர் சந்தன ஹெட்டி யாராச்சிக்கு வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முப்படைகளின்பிரதானியான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன உதவி யதாகவும் நீதவானிடம் முறையிட்டார்.

இது சம்பந்தப்பட்ட புறம்பான விசாரணைகளும் நடத்தப்படுவதாகவும் நீதவா னிடம் குறிப்பிட்ட சீ.ஐ.டி பொறுப்பதிகாரி, தமிழ்இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், போலி ஆவணத் தயாரிப்பு மற்றும் சந்தன ஹெட்டியாராச்சி நாட்டை விட்டுதப்பிச்செல்வதற்கு உதவி வழங்கப்பட்டுள்ளது குறித்தும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதன்போது சந்தன ஹெட்டியாராச்சி நாட்டைவிட்டு தப்பிச்செல்வதற்கு உத வியதை நிரூபிப்பதற்குத் தேவையான போதிய ஆதாரங்கள் இருப்பின் முப் படைகளின் பிரதானியான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு குற்றப்புலனாய்வுப்பிரிவு பொலிசாருக்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

அதேவேளை லெப்டினன் கமாண்டர் சந்தன ஹெட்டியராச்சியைதொடர்ந்தும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கு மாறும் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன ஆணையிட் டுள்ளாா். 

- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு.