நாவற்குழியிலுள்ள 107 குடும்பங்களை வெளியேறுமாறு அரசாங்கம்.!
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் குடியிருக்கும் 107 குடும்பங்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத் துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் தெரிவித்துள்ளாா்.
பாராளுமன்றத்தில் இன்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டகள்ஸ் தேவானந்தா 27- 2 இன் கீழ் எழுப்பிய கேள்விக்கு அமைச் சர் சஜித் பிரேமதாஸ பதிலளித்த பின்னரே சுமந்திரன் இவ் விடயத்தை அமைச்சரின் கவனத்திற்கு பார்வை க்குத் திருப்பியுள்ளாா்.
மேலும் தெரிவித்ததாவது,
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் 107 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் மிகவும் கஷ்டத்தின் மத் தியில் வசித்து வருவதை நான் அறிவேன். இக் குடும்பங்களை அக்காணியில் இருந்து வெளியேற்றிவிட்டு அக்காணியை கையகப்படுத்த அரசாங்கம் வழ ங்கு தொடுத்துள்ளது.
மேலும் இவ் விவகாரத்தை உடனடியாக அமைச்சர் கவனத்தில் எடுத்து அம் மக்களுக்கு அவர்கள் குடியிருக்கும் காணியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளாா்.
அரசாங்கத்தின் காணிக்கொள்கையில் மக்களை காணிகளிலிருந்து வெளியே ற்றும் கொள்கை உள்ளடக்கப்படவில்லை. இப்பிரச்சினை தொடர்பில் உட னடியாக கவனத்திலெடுத்து இவ் விவகாரம் தொடா்பாக உங்களுக்கு ஆக்க பூர்வமான பதிலொன்றை விரைவில் வழங்குவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ சுமந்திரனிடம் வாக்குறுதியளித்துள்ளாா்.