Breaking News

பாராளுமன்ற வாக்குவாதத்தில் குறுக்கிட்ட சபாநாயகர்.!

முன்னாள் வீடமைப்புத்துறை விமல் வீரவன்சவுக்கும் வீடமைப்பு மற்றும் நிர் மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்குமிடையில் இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் சபையில் கடும் வாக்குவாதம் புரண்டது.

 மேலும் தெரிய வருகையில், 

விமல் வீரவன்ச நிர்மாணித்த வீடுகளில் பல அவரது உறவினர்களுக்கே வழங்கப் பட்டுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியதையடுத்து விமல் வீரவன்ச எம்.பி. க்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குற்றச்சாட்டை நிரூபித்தால் தான் பாராளுமன்ற மந்திரி பதவியில் இருந்து நீங்குவேன் என விமல் வீரவன்ச தெரிவிக்கையில், எனது குற்றச்சாட்டு பொய் என்றால் அமைச்சுப் பதவியை துறப்பேன் என சஜித் பிரேமதாச தெரிவித் துள்ளாா். 

குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜெயசூரிய, நிகழ்கால அமைச்சரும் முன்னாள் அமைச்சரும் சிறு பிள்ளைகள் போன்று சண்டை போட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களின் தனிப்பட்ட காரணிகளை கூறும் இடம் இதுவல்ல. 

இன்றைய தினம் மிகவும் முக்கியமான சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே காலத்தை வீணடிக்க வேண்டாமெனத்  தெரிவித்த  பின்னரும் விமல் வீரவன்சவும் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் தொடர்ச்சி யாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.