Breaking News

சம்பந்தனின் பதவியால் சர்ச்சை பாராளுமன்றத்தில்.!

எதிர்க்கட்சிப் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைபிற்கே வழங்கப்பட வேண்டு மென சபாநாயகர் இன்று காலை தெரிவித்ததையடுத்து, சபாநாயகரின் தீர் மானத்தை ஏற்கப் போவதில்லை.  

எதிர்க் கட்சிப் பதவி எமக்கு வழங் கப்பட வேண்டுமென பொது எதிரணி யினர் கோஷம் எழுப்பி சபையில் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன் ஒழுங் குப் பிரச்சினை எழுப்பிய பொது எதிர ணியினர், உங்களின் தீர்மானத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

நீங்கள் நடுநிலையாக நடந்து கொள்ள வில்லை. நாங்கள் இந்த நாட்டு மக்களின் வாக்குகளை பெற்று பாராளு மன்றத்திற்கு வந்துள்ளோம், நீங்கள் இன்று நடந்து கொண்ட விதத்தில் மக்க ளின் வரப்பிரசாதத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது. 

மக்கள் குரலை நீங்கள் நிராகரித்துள்ளீர்கள் என சபாநாயகர் கருஜயசூரியவிடம் கூறினார். இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், ஆம் நான் அவ்வாறு தான் செய்தேன், இத்துடன் உங்களின் கருத்தினை நிறுத் துங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.