சிவாஜிலிங்கம் இந்தியா செல்லத் தடை.!
இந்தியாவில் இன்று ஆரம்பமாகவுள்ள அரசியல் சார் பயிற்சி நெறியில் கலந்து கொள்ளவதற்காகச் செல்லும் அரசியல் குழுவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவாகியுள்ள போதிலும் அவருக்கான விசா அனுமதியை வழங்க இந்தியா மறுத்துள்ளது.
கடந்த காலங்களில் இந்திய அரசாங் கம் தொடர்ச்சியாக அவருக்கான விசாவை மறுத்து வந்த நிலையிலேயே இம்முறையும் விசா நுழைவுச்சீட்டு மறுக்கப்பட்டுள்ளது.
"ஆசியா பவுண்டேஷன்" நிறுவனத் தின் ஏற்பாட்டில் இலங்கை மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இந்தியாவில் 3 கட்டங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இதில் கலந்துகொள்ள சிவாஜிலிங்கத்துக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
எனினும் ஏனையவர்கள் இந்தியா சென்றுள்ள போதிலும் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கான விசாவை இந்தியா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.
எனினும் ஏனையவர்கள் இந்தியா சென்றுள்ள போதிலும் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கான விசாவை இந்தியா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.









