Breaking News

ராஜபக்ச சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு - சரத் பொன்சேகா.!

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உட்பட இராணுவப் புலனாய்வாளர்கள் சிக்கியுள்ள ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மிக முக்கிய அமைச்சர் ஒருவரே தொடர்புபட்டிருப்பதாக முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. 

சிறிலங்காவின் முன்னாள் இரா ணுவத் தளபதியான தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட்மார்ஷல் சரத் பொன் சேகாவே  கடத்தல் மற்றும் சித்திர வதைக்கு உத்தரவிட்டதாக குற்றம் சாட்டும் மஹிந்தவாதிகள், எனினும் அவரை விசாரணைக்கு உட்படுத்தாது அந்தப் பழியையும் ராஜபக்ச குடும்பத் தினர் மீது சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனா்.

தி நேசன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியரான ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பி லான அனைத்துச்சாட்சிகளும் இதனையே வெளிப்படுத்துவதாக தெரிவித் துள்ள மஹிந்தத அணியினர் எனினும் அந்த அனைத்து சாட்சிகளையும் உதா சீனப்படுத்தி, அந்தக் குற்றச்சாட்டையும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது திணிக்க அரசாங்கம் முயன்று வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மஹிந்தவாதிகளான கூட்டு எதிரணியினர் விடுத்துள்ள செய் திக் குறிப்பொன்றில் ஊடகவியலாளர் கீத் நொயார் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி எழுதியிருந்த கட்டுரை மற்றும் அப்போதைய எதிர்கட்சி யின் பிரதான கொறாடாவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா 2008 ஆம் ஆண்டு யூலை மாதம் எட்டாம்திகதி பாராளுமன்றில் ஆற்றி யிருந்த விசேட உரையையும் அடிப்படையாகக் கொண்டு கீத் நொயார்கடத்தல் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி உள்ளாா்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்படுவதற்க பத்து நாட்களுக்கு முன் னதாக 2008ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வெளியாகிய தி நேஷன் பத்திரிகையின் “மிலிட்டரிமெட்டர்ஸ்” என்ற பத்தியில் இராணுவம் என்பது இராணுவத் தளபதியின் தனிப்பட்ட சொத்து அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

இதனால் அவரை துன்புறுத்துவதற்கான தேவை யாருக்குஇருந்திருக்கும் என் பதை புரிந்துகொள்ள முடியும் என்றும் மஹிந்தவாதிகளான கூட்டு எதிரணி யினர் செப்டெம்பர் 16 ஆம் திகதியான இன்றைய தினம் வெளியிட்டுள்ள அவசரசெய்திக் குறிப்பில் கோடி காட்டியுள்ளனர்.

இதேவேளை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் – முன் னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனா திபதி மஹிந்தராஜபக்சவிற்கும் இடையிலான முறுகல் தீவிரமடைந்த நாள் முதல், ஊடகவியலாளர் கீத் நொயரின் கடத்தல் மாத்திரமன்றி ஊடகவிய லாளர் லசந்த விக்கரமதுங்கவின் படுகொலையுடனும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே தொடர்புபட்டிருப்பதாக ராஜபக்ச சகோதரர்களும்,அவரது விசு வாசிகளும் குற்றம் சுமத்தியுள்ளனா்.

அதேபோல் பரஸ்பரம் ராஜபக்ச சகோதரர்களே இந்தக் கொடூரங்களை அரங் கேற்றியதாக சரத்பொன்சேகாவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளாா். 

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -