நாடு திரும்பினார் ஜனாதிபதி
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு நேபாளத்திற்கு விஜயமாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள் ளார்.
நேபாளத்தின் தலைநகர் காத் மண்டு வில் நடைபெற்ற வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமை ப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் நான்காவது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 29 ஆம் திகதி நேபாளம் நோக்கி விரைந்தாா்.
இலங்கை, இந்தியா, மியன்மார், பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், மற் றும் தாய்லாந்து ஆகிய ஏழு நாடுகள் இதில் பங்கேற்றிருந்தன.
மேலும் நேற்றைய தினம் காத்மண்டு நகரிலுள்ள முதலாவது தேரவாத பௌ த்த விகாரையான ஆனந்த கு(ட்)டி விகாரைக்கு விஜயம் செய்து விகாராதிபதி, நேபாளத்தின் பிக்கு சங்க சபையின் தலைவர் சங்கைக்குரிய மைத்ரி மகாதேர தேரரை ஜனாதிபதி சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளாா்.