Breaking News

பாடசாலைகள் நாளை ஆரம்பம்

அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் அவற்றின் மூன்றாம் தவணைப் பாட சாலைக் கல்வி நடவடிக்கைகளுக்காக 2018 செப்டெம்பர் 03 ஆம் திகதி  நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதேவேளை க.பொ.த (உயர்தர)ப் பரீட் சையின் முதலாம் கட்ட மதிப்பீட்டு நிலை யங்களாக உபயோகிக்கப்படும் 37 பாடசா லைகள் மாத்திரம் அவற்றின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக 2018 செப்டெம்பர் 06 ஆம் திகதி அறிவிக்கப் படுமெனத் தெரிவித்துள்ளது. 

மதிப்பீட்டு நிலையங்களாக உபயோகிக்கப்படும் 37 பாடசாலைகளின் பெயர்ப் பட்டியலையும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 


கொழும்பிலுள்ள ராஜகீய, நாலந்தா, சுசமயவர்தன, கிலிப்டன் பாலிகா, இந்து வித்தியாலயங்கள், களுத்துறை வேலாபுர மற்றும் ஞானோதய மகா வித்தியாலயம், கம்பஹாவில் பண்டாரநாயக்க, ரத்னாவலி பாலிகா மற்றும் அனுர மத்திய மகா வித்தியாலயங்கள், இரத்தினபுரியில் பர்கஸன் உயர்தர மற்றும் கங்கந்த மத்திய மகா வித்தியாலயங்கள், 

குருநாகலில் மலியதேவ பாலிகா, மலியதேவ மற்றும் வயம்ப ராஜகீய வித்தியாலயங்கள், குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலயம், கேகாலை யில் சாந்த ஜோசெப் பாலிகா மற்றும் கேகலை வித்தியாலயங்கள், கண்டியில் கிங்ஸ்வூட், விகாரமகாதேவி பாலிகா, சீதாதேவி பாலிகா, ரணபிம ராஜகீய மற்றும் 

சில்வெஸ்டர் வித்தியாலயங்களும், அனுராதபுர மத்திய மகா வித்தியாலம், காலியில் வித்தியாலோக மற்றும் சுதர்மா வித்தியாலயங்கள் மாத்தறையில் சுஜாதா, சாந்த தோமஸ் மற்றும் ராஹூல வித்தியாலயங்கள், பதுளையில் ஹாலிஎல மத்திய மகா வித்தியாலயம் மற்றும் ஊவ மகா வித்தியாலயங்கள், 

மட்டக்களப்பில் வின்சென்ற் உயர்தர பெண்கள் மற்றும் சென்ற் மைக்கல் பாடசாலைகள், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணத் தில் மத்திய மகா வித்தியாலயம், இந்து வித்தியாலயம், கொக்குவில் இந்து வித்தியாலயம் ஆகியவையே க.பொ.த (உயர்தர)ப் பரீட்சை மதிப்பீட்டு நிலை யங்களாக உபயோகிக்கப்படும் 37 பாடசாலைகளுமாகுமெனத் தெரிவிக்கப்பட் டுள்ளது.