கைவிலங்குடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் குடும்பஸ்தர்.!
கனகராயன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கானார் என குற்றஞ்சாட்டப்படும் நபா் ஒருவா் கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சை கைவிலங்குடன் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கின்றாா்.
மனிதாபிமானமற்ற முறையிலான இச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், உறுப்பினருமான ப.சத்தியலிங் கம் தெரிவித்துள்ளாா்.
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவிக்கையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தாக்குதலில் காயமடைந்துள்ள குடும்பத் தலைவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை நான் நேரில் சென்று பார்வையிட்டேன்.
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குடும்பத் தலைவர் மீது அவரது காணியில் வைத்துத் தாக்குதல் நடத்தியிருக்கிறார். பின்னர் வாகனத்தில் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று அங்கும் வைத்தும் தாக்கியுள்ளார்.
காயமடைந்தவர் குடிபோதையில் வீழ்ந்து கிடந்தார் என்று தெரிவித்து மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப் பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவரின் மனைவி அவர் குடிப்பதில்லையெனத் தெரிவித்துள் ளாா்.
இதன் பின்னர் பொலிஸார் கிளிநொச்சி வைத்தியாசலையில் சேர்த்துள்ளனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அவரது கை இரண்டும் விலங்கிடப்பட்டுள்ளது. தலைக்கு மேலாக கையை வைத்து வைத்தியசாலை கட்டிலுடன் பிணை த்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
இது மனிதாபிமானமற்ற செயற்பாடு இச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.








